கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள் : - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, September 15, 2019

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள் :

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள் :


ஆரோக்கியமற்ற உணவு 


நிறைவுற்ற கொழுப்பு உட்கொள்வதால், உயர்நிலை கொலஸ்ட்ரால் ஏற்படுகிறது. இத்தகைய நிறைவுற்ற கொழுப்பானது, கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுப் பொருட்களில் அதிகம் நிறைந்துள்ளன. அந்த உணவு பொருட்களாவன கொழுப்பு நிறைந்துள்ள இறைச்சிகள், வெண்ணெய், சீஸ், கேக்குகள், நெய் போன்றவைகளாகும். எனவே கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். 

பரம்பரை காரணிகள் 

நோயாளியின் பரம்பரையில், அதாவது குடும்ப வரலாற்றில் யாருக்காவது உயர்நிலை கொலஸ்ட்ரால் இருந்தாலும், உயர்நிலைக் கொலஸ்ட்ரால் வரும். அதிலும் உயர்நிலை கொலஸ்ட்ரால் மரபுரிமையாக கொண்டு ஏற்பட்டால், அது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற வடிவத்தில் ஏற்படுகிறது. 

கூடுதல் எடையை பெற்றிருத்தல்

உடல் பருமன் அல்லது வெறுமனே அதிக எடையை கொண்டிருத்தல், உயர்நிலை கொலஸ்ட்ரால் ஏற்படுவதற்கு மற்றொரு காரணமாகும். அது மட்டுமல்லாமல், ஒருவரின் சமூக வாழ்க்கையையும் பாதித்து, மேலும் அடைப்புகளுக்கு காரணமாக உள்ள ட்ரைகிளிசரைடுகளை அதிகரிக்க செய்கிறது. ஆகையால், உயர்நிலை கொலஸ்ட்ராலால் ஏற்படும் ஆபத்தைத் தடுப்பதற்கு, எடையை பராமரிக்க வேண்டியது அவசியம். 

சோம்பல் 

யாரொருவர் வாழ்க்கையை நாள் முழுவதும் உட்கார்ந்து அல்லது படுத்திருந்து, எந்தவொரு செயலின்றியும் பொழுது போக்குகின்றார்களோ, அவர்களுக்கு உயர்நிலை கொலஸ்ட்ரால் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. சுறுசுறுப்பான செயல்பாட்டிலுள்ளவரின் வாழ்க்கை ட்ரைகிளிசரைடுகளை குறைத்து, எடையை பராமரிக்கவும் உதவுகிறது. 

புகைபிடித்தல் 

சிகரெட் பிடித்தல், ஒருவருடைய கொழுப்பின் அளவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அது நல்ல கொலஸ்ட்ராலையும், அதே போல் ஒருவரின் ஆயுட்காலத்தின் அளவையும் குறைக்கிறது. எனவே, கொழுப்பின் அளவை பராமரித்து மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ புகைப்பிடித்தலை விட்டு விட வேண்டும். 

மருந்துகள் 

சில மருந்துகள் ட்ரைகிளிசரைடுகளின் அளவை அதிகரிக்க செய்ய முடியும். இதனால், ஒரு மாத்திரையை உட்கொள்ளுவதற்கு முன்பு, மருத்துவரின் தகுந்த ஆலோசனையைப் பெற வேண்டும். 

மதுபானம் 

தொடர்ந்து மதுபானம் அருந்தும் போது, உயர் இரத்த அழுத்தம் அதிகரித்து, உடலில் கொலஸ்ட்ராலின் அளவும் அதிகரிப்பதன் காரணமாக, கல்லீரல், இதய தசைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

மன அழுத்தம் 

மக்கள் மன அழுத்தத்தின் போது வழக்கமாக மது அருந்துவது அல்லது கொழுப்பு உணவு பொருட்களை உண்ணுதல், புகைப்பிடித்தல் மூலம் தங்களை ஆறுதல் படுத்திக் கொள்கின்றனர். ஆகையால், நீடித்த மன அழுத்தம் இரத்த கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்ய காரணமாகலாம். 

நோய்கள் 

நீரிழிவு மற்றும் தைராய்டு சுரப்பு குறைவு போன்ற சில நோய்கள் உடலில் கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும். இந்த காரணத்திற்காக, கொழுப்பின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க, தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.



Post Top Ad