பொதுத் தேர்வு எழுத மாணவர்களை தடுக்கக் கூடாது தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

பொதுத் தேர்வு எழுத மாணவர்களை தடுக்கக் கூடாது தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை


சென்னை, சரியாக படிக்காத மாணவர்களை, பொதுத் தேர்வு எழுதுவதில் இருந்து தடுக்கக் கூடாது என்றும், விதிகளை மீறினால், குற்றவியல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.இதற்காகவே, அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கான, புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழக பள்ளி கல்வி துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள அரசாணை:தனியார் பள்ளிகளில், பாடத்திட்ட விதிமீறலுக்கு குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், மாணவர் உயிர், பொருள் பாதுகாப்பு, சேர்க்கை, கட்டணம், தேர்வுகளை முறைப்படுத்தவும், இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.அதன்படி, ஒவ்வொரு தனியார் பள்ளியும், பள்ளிக் குழு மற்றும் பெற்றோர் - ஆசிரியர் சங்கம் அமைக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில், அதன் கூட்டங்களை நடத்த வேண்டும். சிறுபான்மை பள்ளிகள், அப்பள்ளியை நிர்வகிக்க, சிறப்பு சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவரை பணியமர்த்த வேண்டும். மன, உடல்ரீதியிலான மற்றும் பாலியல் தொல்லைகளில் இருந்து, மாணவர்களை காக்க வேண்டும்.பாடத்திட்டத்துடன், இணை பாடங்களையும் சேர்த்து நடத்த வேண்டும். மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என, பொதுத் தேர்வு எழுதுவதைத் தடுக்கக் கூடாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள்ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், பள்ளி திறப்புக்கு, 30 நாட்களுக்கு முன், மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். அதுகுறித்து, மக்களை சென்றடையும் வகையில், அறிவிப்பு வெளியிட வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேர்தல் பணிகளுக்கு, ஆசிரியர்கள், ஊழியர்களை அனுப்ப வேண்டும். பள்ளி கட்டண ஒழுங்குமுறை சட்டத்தை மீறி, பிற கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது. கல்வி ஆண்டு முழுவதும், பாடம் கற்பிக்க வேண்டும். கல்வி ஆண்டின் இடையில், எந்த மாணவரையும் வெளியேற்றவோ, பாடப்பிரிவு மற்றும் வகுப்பு மாற்றவோ கூடாது என, தனியார் பள்ளிகளுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.








0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive