டி.ஆர்.பி., ஹால்டிக்கெட் குளறுபடி அதிர்ச்சியில் தேர்வர்கள்

டி.ஆர்.பி., ஹால்டிக்கெட் குளறுபடி அதிர்ச்சியில் தேர்வர்கள்

சிவகாசி:அரசுப்பள்ளி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) ஹால்டிக்கெட்டில் குளறுபடிகள் இருப்பதால் தேர்வர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.இத்தேர்வு செப். 27 ல் நடக்க உள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அனுப்பன் குளத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சரஸ்வதி விண்ணப்பத்தில் விருதுநகர், திருநெல்வேலி, மதுரை என தேர்வு மையங்களை குறிப்பிட்டிருந்தார்.


ஆனால் அவருக்கு ஈரோடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டில் விக்னேஷ்வரி என்ற கையெழுத்து உள்ளது. இதேபோல் பலருக்கு அதிக துாரங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.சரஸ்வதி கூறுகையில்,''ஹால்டிக்கெட்டில் வேறு ஒருவரின் கையெழுத்து உள்ளது. அவ்வளவு துாரம் சென்ற பின் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றால் என்ன செய்வது. இதற்கு மாற்று வழியை தேர்வு வாரியம் தெரிவிக்கவேண்டும்'' என்றார்.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive