Ceo.,வுக்கு பதவி உயர்வு
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு, இணை இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறையின், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, ராஜேந்திரன், பள்ளி கல்வித் துறையின், இணை இயக்குனராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இவர், பள்ளி கல்வி இயக்குனரகத்தின், மேல்நிலைப் பள்ளி பிரிவை கவனிப்பார் என, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், பதவி உயர்வால் காலியாகும், சென்னை முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பை, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, ஆஞ்சலோ இருதயசாமி கூடுதலாக, தற்காலிகமாக கவனிப்பார். அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து, அதிகாரி ராஜேந்திரன் பணி விடுவிப்பு பெறலாம் என, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார்.
0 Comments:
Post a Comment