அதிக விழுக்காட்டில் ஆசிரியர் தேர்ச்சியுற வழி வகுக்கணும்! Tet அடிப்படையிலேயே முரண்பாடுகள் களைய வேண்டும். - நாளிதழ் செய்தி - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, September 11, 2019

அதிக விழுக்காட்டில் ஆசிரியர் தேர்ச்சியுற வழி வகுக்கணும்! Tet அடிப்படையிலேயே முரண்பாடுகள் களைய வேண்டும். - நாளிதழ் செய்தி

அதிக விழுக்காட்டில் ஆசிரியர் தேர்ச்சியுற வழி வகுக்கணும்! Tet அடிப்படையிலேயே முரண்பாடுகள் களைய வேண்டும். - நாளிதழ் செய்தி


அதிக விழுக்காட்டில் ஆசிரியர் தேர்ச்சியுற வழி வகுக்கணும்!


- நாளிதழ் செய்தி

வ.லெட்சுமணன், அரியலுார், பெரம்பலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:

 பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு, 2011 முதல் கட்டாயமாக்கப்பட்டது. தமிழகத்தில், ஆண்டுதோறும் நடத்தப்படும் தேர்வில், ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். தற்போது நடைமுறையிலுள்ள பாடத்திட்டத்தில், நான்கு பிரிவுகளில், குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல், 30, தமிழ், 30, ஆங்கிலம், 30, கணிதம் மற்றும் அறிவியல், 30 அல்லது சமூக அறிவியல், 60 என, மொத்தம், 150 வினாக்கள் கேட்கப்படுகின்றன.

இந்த பாடத்திட்டத்தில் நடத்தப்படும், தாள் - 2 தேர்வில், குறைவான தேர்ச்சி விகிதங்களில், ஆசிரியர் தேர்ச்சி பெறுகின்றனர். பள்ளிப்படிப்பை முடித்தவுடன், இளநிலை பட்டப்படிப்பில், முதன்மை பாடங்களை தேர்வு செய்து, பட்டம் பெறுகின்றனர். இந்த அடிப்படையில், இளநிலை கல்வியியல் பட்டம் பெற்று, பட்டதாரி ஆசிரியர் தகுதி பெறுகின்றனர். அவர்களின் முதன்மை பாடத்தின் அடிப்படையில், தகுதித் தேர்வை நடத்தாமல், பயிலாத பாடத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படுகிறது; இதில் கட்டாயம் மாற்றம் தேவை.

உதாரணமாக, தமிழ் மற்றும் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்கள், சமூக அறிவியல் பாடத்தில் கேட்கப்படும், 60 வினாக்களுக்கு, எப்படி பதில் அளிக்க முடியும்! கணித பாட பட்டதாரி ஆசிரியர், உயிரியல் பாடத்தில் கேட்கப்படும் வினாக்களுக்கு எப்படி விடையளிக்க முடியும்? தற்போது பின்பற்றப்படும் பாடத்திட்டத்தை நீக்கி, பட்டதாரி ஆசிரியரின் மொழியறிவு, உளவியல், அவர்களது முதன்மைப் பாடம் என்ற மூன்று பிரிவுகளின் அடிப்படையில், தேர்வு நடத்த வேண்டும்.

மொழி அறிவு சம்பந்தமான, 30 வினாக்கள், உளவியல், 30 வினாக்கள், முதன்மைப்பாடத்தில், 90 வினாக்கள் என, மொத்தம், 150 வினாக்கள் என்ற முறையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். வருவாய் நோக்கத்திற்காக, வேலையில்லா பட்டதாரிகளுக்கு தேர்வு நடத்தாமல், தகுதித் தேர்வில், அதிக விழுக்காட்டில், ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதற்கான, முதன்மை பாடத் திட்டத்தில் தேர்வு நடத்த வேண்டும்!

Post Top Ad