ஆசிரியர்களுக்குத் தேவையான தினசரிக் கண்ணாடி Ganga Guide

ஆசிரியர்களுக்குத் தேவையான தினசரிக் கண்ணாடி Ganga Guide


முக்கிய தினங்கள் . அரசுப் பொது விடுமுறைகள்
வளரறி, தொகுத்தறி மதிப்பீட்டு விளக்கங்கள் (FAQ)
கல்வி இணைச் செயல்பாடுகளின் விவரங்கள் - மதிப்பெண், தரநிலை விளக்கங்கள் மாத வரவு / செலவு பட்டியல்
வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்கள் (R.H)


Click Here To Download - தினசரி கண்ணாடி PDF



நமது நாட்டின் புதுபிக்கப்பட்ட வரைபடம்!

நமது நாட்டின் புதுபிக்கப்பட்ட வரைபடம்!


நமது நாட்டின் புதுபிக்கப்பட்ட வரைபடம்! இன்று முதல் நாட்டில் 28 மாநிலங்களும், 9 யூனியன் பிரதேசங்கள்




5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு! மாதிரி வினாத்தாள், தேர்வு பயிற்சி அளிக்கப்படும்! தொடக்கக் கல்வித் துறை!

5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு! மாதிரி வினாத்தாள், தேர்வு பயிற்சி அளிக்கப்படும்! தொடக்கக் கல்வித் துறை!

5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மாணவர்களின் அடிப்படை கற்றல் தரத்தை சோதனை செய்யும் வகையில் நடத்தப்படும் என்று என்று தொடக்கக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும். முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் மாணவர்கள் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.


எனினும், தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறை கள் வெளியிடப்படாததால் பல்வேறு குழப்பங்கள் நிலவின. இந்நிலையில் 5, 8-ம் வகுப்புகளுக்கு முப்பருவக்கல்வி முறையிலேயே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தொடக்கக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் சேதுராமவர்மா,

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் 5, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இனி கல்வியாண்டு இறுதியில் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கான வழி காட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் 9 பேர் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்படும். இந்தக்குழு 5, 8-ம் பொதுத் தேர்வு தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.


பொதுத்தேர்வு எழுதும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிலும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கி.மீட்டர் தொலைவிலும் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும். தேவைப்படும் பள்ளிகளில் கூடுதல் தேர்வு மையங்களையும், போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரலாம். பொதுத் தேர்வு தற்போதுள்ள வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடு அடிப்படையில் நடத்தப்படும்.

அதன்படி 5, 8-ம் வகுப்புக்கு கல்வியாண்டு இறுதியில் எழுத்துத்தேர்வு 60 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மீதமுள்ள 40 மதிப்பெண்கள் கல்வி தொடர்பான வளரறி மதிப்பீடு செயல்பாடுகளுக்கு வழங்கப்படும்.

5-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் தொடர்பான அடிப்படை கருத்துகள், பயிற்சிகள் மற்றும் கற்றல் விளைவுகளை சோதிக்கும் வகையில் எழுத்துத் தேர்வு நடைபெறும். 8-ம் வகுப்புக்கு அனைத்து பாடங்களுக்கும் முப்பருவ அடிப்படை கருத்துகள் மற்றும் பயிற்சிகளை சோதித்தறியும் வகையில் நடைபெறும்.


பொதுத் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைக் குறிப்புகள் தேர்வுத் துறையால் தயாரிக்கப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். மாவட்ட தேர்வுக்குழு அதை பிரதி எடுத்து பள்ளிகளுக்கு பிரித்து தரவேண்டும்.

இது தவிர விடைத்தாள்கள் குறுவளமைய அளவிலேயே மதிப்பீடு செய்யப்படும். திருத்தப் பட்ட விடைத்தாள்கள் மற்றும் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை சம்பந்தபட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளி தலைமையாசிரியர் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'முப்பருவக்கல்வி முறை 5, 8-ம் வகுப்புகளுக்கு நீக்கப்படவில்லை. அதற்கு மாறாக கல்வியாண்டின் இறுதியில் நடத்தப்படும் பொதுத் தேர்வு மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன்களை சோதிக்கும் வகையில் இருக்கும். அடுத்தகட்ட வகுப்புகளுக்கு செல்வதற்கான தர மதிப்பீடு தேர்வாகவே அவற்றை கருத வேண்டும்.

பொதுத்தேர்வு வினாத்தாளில் முந்தைய வகுப்புகளில் உள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் கூட கேள்விகள் இடம்பெறக்கூடும். அதேநேரம் தேர்வு வடிவ முறை எளிதாகவே இருக்கும். இதற்கான மாதிரி வினாத்தாள் விரைவில் வெளியிடப்படும். ஆண்டு இறுதியில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எழுத பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்படும்'என்றனர்.


Maternity Leave benefits to non-permanent married Women Government Servants - TN Gov GO Published!

Maternity Leave benefits to non-permanent married Women Government Servants - TN Gov GO Published!




Nmms-2019 தேர்வுக்கு பதிவு செய்யும் வசதி கால நீட்டிப்பு!

Nmms-2019 தேர்வுக்கு பதிவு செய்யும் வசதி கால நீட்டிப்பு!


எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS-2019 தேர்வுக்கு பதிவு செய்யும் வசதி நாளை (2.11 .2019)நள்ளிரவு 11.59வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பதிவு செய்யாத பள்ளிகள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.


பள்ளி, கல்லூரிகளில் இன்று ‘தமிழ்நாடு நாள்’ தினத்தை கொண்டாட அரசு உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் இன்று ‘தமிழ்நாடு நாள்’ தினத்தை கொண்டாட அரசு உத்தரவு


பள்ளி, கல்லூரிகளில் ‘தமிழ்நாடு நாள்’ தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றுதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க முடிவானது.

அதன்படி 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சென்னை மாகாணத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா பிரிந்து தனி மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன. அந்த நாளை தமிழகம் உருவான தினமாக கொண்டாட தமிழறிஞர்கள் தொடர் கோரிக்கை வைத்தனர். அதையேற்று நடப்பு ஆண்டு முதல் நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் ‘தமிழ்நாடு நாள்' இன்று (நவ.1) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ் தொன்மை குறித்த தலைப்பில் பேச்சுப் போட்டி உட்பட சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அவ்வாறு நடத்தப்படும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதேபோல், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் தமிழகம் உருவான வரலாறு தொடர்பான கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.



ஆசிரியர் பயிற்சித் தேர்வில் 2.4 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி

ஆசிரியர் பயிற்சித் தேர்வில் 2.4 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி



தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயத்தேர்வு எழுதிய 4,503 மாணவர்களில் 105 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக ஆரம்பப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்த தொடக்கக்கல்வி பட்டயப் பயிற்சி (2 ஆண்டு) முடித்து தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி தமிழகத்தில் 12 அரசு, 29 அரசு நிதியுதவி மற்றும் 247 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் 2019-ம் ஆண்டுக் கான தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு கடந்த ஜூன் மாதம் அரசு தேர்வுத்துறையால் நடத்தப் பட்டது. இதற்கான தேர்வு முடிவு கள் நேற்று முன்தினம் வெளி யானது. அதில் மிகவும்குறைந்தளவில் 2.4 சதவீத மாணவர்களே தேர்ச்சி பெற் றுள்ளனர்.அதன்படி தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வை முதலாமாண்டு மாணவர்கள் 3,000 பேர் எழுதினர். அதில் 75 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல், 2-ம் ஆண்டு மாணவர்கள் 4,503 பேர் தேர்வெழுதினர்.அதில் 105 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயச் சான்று பெற தகுதி பெற்றுள்ளனர்.

விடைத்தாள் திருத்தம் உட்பட தேர்வு முறைகளில் பின்பற்றப் படும் சமீபத்திய கடும் கட்டுப் பாடுகளால் தேர்ச்சி விகிதம் குறைவதாக கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தனர்.




10 , 12-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு.

10 , 12-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு.


மாணவர்களின் சுமையைக் குறைக்க புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் செய்து 10 , 12-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த அரசு முடிவு செய்துள்ளது.


ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு - குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை பெருகும் அபாயம் ஐபெட்டோ அமைப்பு தமிழக அரசுக்கு எச்சரிக்கை.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு - குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை பெருகும் அபாயம் ஐபெட்டோ அமைப்பு தமிழக அரசுக்கு எச்சரிக்கை.



ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-20 ஆம் கல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வினை உறுதிப்படுத்தி தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவால் படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு குடும்ப தொழிலுக்குச் செல்லும் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை பெருகும் அபாயம் ஐபெட்டோ அமைப்பு தமிழக அரசுக்கு எச்சரிக்கை.
*******************************
புதிய கல்விக் கொள்கையின் இறுதி அறிக்கையினை  மத்திய அரசு வெளியிடுவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு தீவிரம் காட்டலாமா? ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-20 ஆம் கல்வி ஆண்டின் இறுதியில் பொது தேர்வு நடத்த வேண்டுமென தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறை கடிதம் 22.10.2019 இல் வெளியாகியுள்ளது. பார்வை:1 அரசாணை நிலை எண் 164 பள்ளிக்கல்வித்துறை நாள் 13 9 2019 பார்வை:2 மாநில பொதுப்பள்ளி கல்வி தலைவரின் ந.க. எண் 23160/2019 நாள் 15.10.2019 அரசாணையினைப் பின்பற்றி இந்த செயல்முறை கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களும் பொதுத்தேர்வு எழுத வேண்டும் என ஒரு தேர்வு மையத்தை தேர்வு செய்வது, வினாத்தாள் தயாரிப்பது, தேர்வு நடத்த ஒரு குழு அமைப்பது என செயல்முறை கடிதத்தில் நீட் தேர்வினை போல் மாணவர்கள் மத்தியில் அச்சுறுத்தப்பட்டு கடிதம் வெளியாகி உள்ளது.  அரசாணையும் செயல்முறை கடிதமும் தயாரித்து வெளியிடுவது என்பதில் எவ்வித சிரமமும் இல்லை. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகத்தான் இயங்கி வருகின்றன. அதிலும் ஓர் ஆசிரியர் இல்லாமல் ஐந்து வகுப்புக்கும் இருபத்தைந்து பாடங்களை ஒருவரே நடத்தி வருகிறார். 59 மாணவர்கள் உள்ள பள்ளிகளில் 5 வகுப்புகள் 25 பாடங்கள். ஆனால் அங்கு அந்த 2 ஆசிரியர் மட்டுமே பாடங்களை நடத்தி வருகிறார்கள். இஎம்ஐஎஸ் இல் மாணவர்கள் விவரங்களை பதிவு செய்வது, இணையதளம் வழியாக ஆசிரியர்கள்  வருகையைப் பதிவு செய்வது, அன்றாடம் அரசின் புள்ளி விவரத்தை தயார் செய்வது,  தலைமையாசிரியர் கூட்டத்திற்கு செல்வது, இடைவிடாது பயிற்சியில் கலந்து கொள்வது போன்ற செயல்பாடுகளுக்கே கற்பித்தல் பணியை விட கூடுதலான நாட்கள் செலவழித்து வருகிறார்கள்.

சுயநிதி பள்ளிகளுக்கு அனுப்பி படிக்க வைக்க வசதி இல்லாத ஏழை எளிய குடும்பத்தவரின் பிள்ளைகள் தான் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களுக்கெல்லாம் நீட் தேர்வை போல,ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வைப் போல, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற தேர்வினை போல நடத்தப்போவதாக கற்பனையில் மிதந்து இந்த அரசாணையினையும் செயல்முறைக் கடிதத்தையும் வெளியிட்டு பொதுத்தேர்வு என்ற அச்சத்தினை மாணவர்கள் மத்தியில் விதைத்துள்ளார்கள். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களோ தமிழ்நாட்டில் பொதுத்தேர்வினை கட்டாயப்படுத்த மாட்டோம். அவ்வாறு பொதுத்தேர்வு நடத்தினாலும் மூன்றாண்டுகளுக்கு ஃபெயில் செய்யமாட்டோம் என்று செல்லும் இடமெல்லாம் ஊடகங்களுக்கும், செய்தியாளர்களுக்கும் பேட்டி அளித்து வந்தார். ஆனால் கல்வி அமைச்சர் அவர்களின் உறுதி இந்த அரசாணையிலோ, செயல்முறை கடிதத்திலோ எவ்விதப் பதிவும் இல்லை. ஒட்டுமொத்தத்தில் பொதுத்தேர்வு என்ற அச்சுறுத்தலால் ஐந்தாம் வகுப்பிலிருந்து கரை சேராமல் படிப்பை பிள்ளைகள் நிறுத்திவிட்டு அவரவர்கள் குடும்பத் தொழில் பார்ப்பதற்கு சென்று விடுவார்கள். எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஒன்பதாம் வகுப்பில் சேருகின்ற மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறையும் அபாயம் உருவாகும். இந்தப் பொது தேர்வும், இளங்கலை பட்ட வகுப்புக்கு நுழைவுத் தேர்வும் உறுதிப்படுத்தப்பட்டால் எட்டாம் வகுப்பை தாண்டி ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு கூட வாய்ப்பு இல்லாத நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள். இந்த பொதுத்தேர்வு தொடர்ச்சியாக நீடித்தால் கல்வியறிவு பெறுபவர்களின் சதவீதம் இந்தியாவில் மிகவும் பின்னடைவினை சந்திக்க நேரிடும். அதேபோல் தமிழகம் கல்வித் தரவரிசையில் ஏழாம் இடத்தில் இருப்பது உத்தரப் பிரதேசத்தைப் போல் மிகவும் பின்னோக்கி  செல்வதற்கான நிலைமை  ஏற்படும். குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையினை பெருக்குவதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்துச் செல்கிறது. அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றார் பாரதி. ஆனால் தமிழக கல்வித்துறை ஏழை எளிய மாணவர்களின் படிப்பினைப்  பாழ்ப்படுத்துகிற பாவத்திற்கு ஆளாகிறார்கள். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள அபாயகரமான பாதிப்பினை தமிழக அரசு கருத்தில் கொண்டு கைவிட வேண்டுமென தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பிலும், ஐபெட்டோ அகில இந்திய அமைப்பின் சார்பிலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களையும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும், கல்வியாளர்களையும் ஆசிரியர் இயக்கங்கள் ஒன்றிணைந்து சந்தித்திட உள்ளோம் என்பதையும் தகவலுக்காக தெரிவித்துக் கொள்கிறோம்.

அறிக்கையினை தொகுத்து அளிப்பவர் வா.அண்ணாமலை,அகில இந்திய செயலாளர், அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு.(All India Federation of elementary teachers organisations) தமிழக ஆசிரியர் கூட்டணி இணைக்கப்பட்டது.
Email: annamalaiaifeto@gmail.com.
Cell: 9444212060.

வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்.


அடுத்த ஆண்டுக்குள் 100 பள்ளிகளில் மாண்டிசொரி கல்வி முறை!

அடுத்த ஆண்டுக்குள் 100 பள்ளிகளில் மாண்டிசொரி கல்வி முறை!



அடுத்த கல்வி ஆண்டுக்குள் 100 மாநகராட்சிப் பள்ளிகளில் மாண்டிசொரி கல்வி முறை அமல்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.பெருநகர சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து, அப்பள்ளியில் நடைபெற்று வரும் மாண்டிசொரி கல்வி முறை குறித்து ஆசிரியா்களிடம் அவா் கேட்டறிந்தாா்.


இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை மாநகராட்சியின் கல்வித் துறையின்கீழ், மேல்நிலை, உயா்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் சுமாா் 90 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். பள்ளி இடைநிற்றல் உள்ளிட்டவற்றைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக பள்ளியின் உள்கட்டமைப்புகளான வகுப்பறை, கழிப்பிடம், ஆசிரியா் அறை, ஆய்வகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவற்றை ரூ. 170 கோடியில் மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.


குழந்தைகள் கல்வி கற்கும் திறனை அதிகரிக்கும் வகையில் தற்போது 22 பள்ளியில் மாண்டிசொரி முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. வரும் டிசம்பா் மாதத்துக்குள் மேலும் 38 பள்ளிகளில் மாண்டிசொரி கல்வி முறை அமல்படுத்தப்படும். இதன் தொடா்ச்சியாக 2020-21-ஆம் கல்வி ஆண்டுக்குள் 100 பள்ளிகளில் மாண்டிசொரி கல்வி முறை அமல்படுத்தப்படும் என்றாா்.



மத்திய அரசு அடுத்த அதிரடி வீட்டு தங்கத்துக்கும் வருகிறது வேட்டு: 30 சதவீதம் அபராத வரி 

மத்திய அரசு அடுத்த அதிரடி வீட்டு தங்கத்துக்கும் வருகிறது வேட்டு: 30 சதவீதம் அபராத வரி



கருப்பு பணத்தை மீட்கும் மற்றொரு முயற்சியாக, கணக்கில் காட்டப்படாத தங்கத்துக்கு 30 சதவீதம் வரிவிதிக்கும் அதிரடி திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்க, மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காகத்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையே கொண்டு வரப்பட்டது. மேலும், கணக்கில் காட்டப்படாமல் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருவதற்கான சலுகை திட்டத்தையும் கடந்த 2016ல் மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி, கருப்பு பணத்தை தானாக முன்வந்து தெரிவித்தால். 30 சதவீத வரி, 7.5 சதவீத கூடுதல் வரி, 7.5 சதவீதம் அபராதம் என மொத்தம் 45 சதவீதம் வரியை செலுத்தி விட்டு, மீதத் தொகையை வெள்ளையாக தங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.


அது பற்றி மத்திய அரசு எந்த விசாரணையும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்காது. ஆனால், புலி வாலை பிடித்த கதையாகி விடும் என்ற அச்சத்தில், கருப்பு பண புள்ளிகள் அதிகளவில் இந்த திட்டத்தை பயன்படுத்தவில்லை. இதனால், இத்திட்டம் முழு வெற்றி பெறவில்லை. அரசியல்வாதிகள் சிலர் மட்டுமே, இத்திட்டத்தை பயன்படுத்தி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றினர். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் முன்பாக, நாட்டில் ரூ.15.4 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இதில், ரூ.2 லட்சம் கோடி முதல் ரூ.3 லட்சம் கோடி வரை வங்கிக்கு திரும்பாது என மத்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால், கிட்டதட்ட முழு அளவிலான பணமும் வங்கிக்கு திரும்பியது. இதனால், மத்திய அரசு ஏமாற்றம் அடைந்தது. பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானதும், பெரும்பாலான கருப்பு பணப்புள்ளிகள் தங்கள் பணத்தை தங்கமாக மாற்றி பதுக்கி விட்டனர்.


இதன் மூலம், பல லட்சம் கோடி பணம் மீண்டும் தங்கமாக பதுங்கி விட்டது. இவ்வாறு கணக்கில் காட்டாமல் இந்தியர்கள் வைத்துள்ள தங்கத்தின் அளவு 20 ஆயிரம் டன்னுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், கணக்கில் காட்டாமல் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம், மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோர் ஆண்டாண்டு காலமாக சேமித்து வைத்திருந்த தங்கம் இவற்றை எல்லாம் கணக்கில் சேர்ந்தால், இந்தியாவில் 25 ஆயிரம் டன் முதல் 30 ஆயிரம் டன் வரை ‘கருப்பு தங்கம்’ இருக்கலாம் என மதிப்பிடப்பட்டு உள்ளது. தற்போதைய மதிப்புப்படி, இவற்றின் மதிப்பு 71 லட்சம் கோடி முதல் 106 லட்சம் கோடி வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டு உள்ளது. இவற்றை கணக்கில் கொண்டு வர மத்திய அரசு, விரைவில் புதிய அதிரடி திட்டத்தை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அந்த திட்டத்தின் விவரங்கள் வருமாறு:
* தனிநபர் ஒருவர் எந்த ரசீதும் இல்லாமலும், கணக்கில் காட்டாமலும் வைத்திருக்கும் தங்கத்தை அரசிடம் தெரிவித்து வரி செலுத்த வேண்டும்.
* இதற்கான வரி எவ்வளவு என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், 30 சதவீதம் முதல் 33 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
* இந்த திட்டம் மூலம் தங்கம் வடிவில் இருக்கும் கருப்பு பணம் கணக்கில் வரும்.
* கணக்கில் காட்டப்படாத பணத்தை அரசிடம் தெரிவிக்க மத்திய அரசு ஏற்கனவே கொண்டு வந்த பிரதமரின், ‘கரீப் கல்யாண் யோஜனா திட்டம்’ ஒரு குறிப்பிட்ட அளவில்தான் வெற்றி பெற்றது. அதனால், தங்கம் வடிவில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்க இந்த புதிய திட்டத்தை அரசு கொண்டு வருகிறது.
* இது நல்ல திட்டமாக இருந்தாலும், இதை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.
* மக்கள் பலர் ஆண்டாண்டு காலமாக தங்க நகைகளை சிறிது சிறிதாக வாங்கி சேமித்து, தங்கள் வாரிசுகளுக்கு கொடுத்து வருகின்றனர். இதற்கான ரசீது பலரிடம் இருக்க வாய்ப்பில்லை. எனவே, ரசீது இல்லாத தங்கத்துக்கு வரி செலுத்த வேண்டும் என அறிவித்தால், அது மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தும்.


* மேலும், கணக்கில் காட்டப்படாத தங்கத்தை அரசிடம் தெரிவித்தால், அதன் பின் வருமான வரித்துறை அதிகாரிகளின் தொந்தரவுக்கும் ஆளாக நேரிடும்.
* பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகும், கணக்கில் காட்டப்படாத பணத்தை அரசிடம் தெரிவித்த பின்பும், பலருக்கு அவர்களின் டெபாசிட் செய்த பணம் எப்படி வந்தது என விளக்கம் கேட்டு வருமான வரித்துறையிடம் இருந்து லட்சக்கணக்கான எஸ்எம்எஸ்.்கள் வந்தன.
* அதனால், அரசின் இந்த திட்டமும் வெற்றி பெறுமா என்பது சந்தேகமே.
* கணக்கில் காட்டப்படாத பணத்தை தெரிவிக்க குறிப்பிட்ட கால அளவு நிர்ணயம் செய்தது போல், தங்கத்தை தெரிவிக்கவும் கெடு நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது.
* கருப்பு பணத்தை மீட்பதில் மோடி அரசு தோல்வியடைந்து விட்டதாக கடந்த மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.


* விரிவான தங்க கொள்கை குறித்து நிதி ஆயோக் 2 ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் வகுத்து வந்தது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த தங்க திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Recent Posts

Total Pageviews

Blog Archive