ரூ. 57,700 சம்பளத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் வேலைவாய்ப்பு

ரூ. 57,700 சம்பளத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் வேலைவாய்ப்பு



தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2331 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

2331 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது

கல்வித் தகுதி :

சம்பந்தப்பட்ட பாடத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் அது தொடர்புடைய பாடத்தில் யுஜிசி விதிமுறைகளின்படி NET / SLET / SET / SLST / CSIR / JRF தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டப்படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சியும் முனைவர் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

01.07.2019 அன்று அதிகபட்சம் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :

ரூ. 57,700 முதல் 1,82,400 வரை சம்பளம் கொடுக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் :

SC / ST பிரிவினர் மற்றும் மாற்று திறனாளிகளை தவிர்த்து மற்ற அனைத்து பிரிவினரும் ரூ. 600/- செலுத்த வேண்டும், SC / ST பிரிவினர் மற்றும் மாற்று திறனாளிகள் ரூ. 300 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://trb.tn.nic.in/arts_2019/NotificationNEW.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 30.10.2019








0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive