757 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க முடிவு - பள்ளிக்கல்வித்துறை
தமிழகத்தில் 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
சிறப்பு எழுத்தறிவு திட்டத்தின் கீழ் ரூ.14.60 லட்சம் செலவில் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. முற்றிலும் எழுதப் படிக்க தெரியாத 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு அளிக்கப்படும். 8 மத்திய சிறைச்சாலைகள், 20 கைதிகளுக்கு மேல் உள்ள மாவட்ட சிறைகளில் தினமும் எழுத்தறிவு பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
0 Comments:
Post a Comment