நீலகிரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் வேதனை!
நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மாணவர்கள் பள்ளிகளுக்கு வர ஆர்வம் காட்டாததால் ஆசிரியர்கள் தினந்தோறும் வீடு வீடாக சென்று அவர்களை அழைத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இருளர், தோடர், கோத்தர், பனியர், காட்டுநாயக்கர், குரும்பர் உள்ளிட்ட 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் படிக்க, மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகள் இயங்கி வருகின்றன.
அண்மைக் காலமாக 50 சதவீத பழங்குடியின மாணவர்கள் பள்ளிக்கு வர ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று மாணவர்களை தேடி கண்டுபிடித்து, அவர்களை தினந்தோறும் பள்ளிக்கு அழைத்து செல்கின்றனர். இவர்களை பெற்றோர்கள் கண்டு கொள்வதில்லை என்றும் ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் தங்களை கண்டவுடன் சில மாணவர்கள் வனப்பகுதிக்குள் ஓடிவிடுவதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment