ஜியோ'வின் அடுத்த அதிரடி திட்டம் : ஹையா...மகிழ்ச்சியில் ஜியோ பயனாளர்கள் :


'ஜியோ'வின் அடுத்த அதிரடி திட்டம் : ஹையா...மகிழ்ச்சியில் ஜியோ பயனாளர்கள்


கடந்த 2017 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தனது ஜியோ தொலைத் தொடர்பு சேவையை இலவசமாக அறிவித்தார். அதுவரை செல்போனில் சில எம்பி நெட்டுக்காக ரீ சார்ஜ் செய்ய பல நூறு ரூபாய்கள் செலவு செய்து வந்த ஏர்டெல், வொடபோன் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு மாறினர்.அதனால் மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களும் தங்களின் நெட் ரீசார்ஜ் செய்யும் விலையைக் குறைத்தனர். 

அதனால் இந்தியாவில் ரிலையன்ஸ் மொபைல்களை போல் அந்த நிறுவனத்தின் ஜியோ நெட்வொர்க்கும் இணையதள புரட்சிக்கு வித்திட்டுள்ளது. இந்நிலையில் அந்த நிறுவனம் ஜியோ வீடியோ கால் அஸிஸ்டெண்ட் என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், (Artficial Intelligence) செயற்கை அறிவு மூலமாக 4 ஜி தொழில்நுட்பத்தின் மூலமாக வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தானாகவே பதிலளிக்கும் வகையில் இந்த தொழில் நுட்பம் வடிவமைக்ப்பட்டுள்ளது.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive