ஆசிரியர் தேர்வு வாரிய பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையில் சர்ச்சை...

ஆசிரியர் தேர்வு வாரிய பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையில் சர்ச்சை...


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையில் எம்.எஸ்.சி. எலக்ட்ரானிக் மீடியா படிப்பு பட்டியலிடப்படாததால், விண்ணப்பதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.




அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புதற்கான அறிவிப்பாணையில் விஷூவல் கம்யூனிகேசன் பிரிவில் 21 இடங்கள், ஜர்னலிசம் பிரிவில் 11 இடங்களும் இடம் பெற்றுள்ளன.


இவற்றுக்கு விண்ணப்பிக்க எம்.எஸ்.சி. விஸ்காம் அல்லது எம்.எஸ்.சி. எலக்ட்ரானிக் மீடியா முடித்து பி.எச்.டி. அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது பல்கலைக்கழக மானியக்குழு விதியாக உள்ளது.


ஆனால் டி.ஆர்.பி. இணையதளத்தில் விஷூவல் கம்யூனிகேசன் பாடங்களுக்கு எம்.எஸ்.சி. விஸ்காம் அல்லது எம்.ஏ. மாஸ் கம்யூனிகேஷன் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில் தமிழக அரசின் வழிகாட்டுதலின் படியே அறிவிப்பாணை வெளியிடப்பட்டு தேர்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அரசு அனுப்பிய இணையான படிப்புகள் பட்டியலில் எம்.எஸ்.சி. எலக்ட்ரானிக் மீடியா குறித்த தெளிவான வரையறை எதுவும் இல்லை என்றும் ஆசிரியர் தேர்வு வாரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source Polimer News







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive