Pgtrb 2019 - முதுநிலை ஆசிரியர் தேர்வு மூலம் கூடுதலாக 84 பணியிடங்கள் நிரப்பப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்.

Pgtrb 2019 - முதுநிலை ஆசிரியர் தேர்வு மூலம் கூடுதலாக 84 பணியிடங்கள் நிரப்பப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்.


அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 2,144 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப, செப்டம்பரில், கணினி வழி தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.இதில், 1.47 லட்சம் பேர் பங்கேற்றனர்.அவர்களுக்கான தேர்வு முடிவுகள், கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இதை தொடர்ந்து, இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, அடுத்தகட்டமான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று வெளியிட்டது.

மேலும், பிற்படுத்தப்பட்டார், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின பிரிவினருக்கான, 84 காலி இடங்கள், இந்த தேர்வின் வழியாக, கூடுதலாக நிரப்பப்பட உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா அறிவித்து உள்ளார்.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive