2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பணி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணை எப்போது வெளியிடப்படும்? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, November 21, 2019

2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பணி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணை எப்போது வெளியிடப்படும்?

2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பணி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணை எப்போது வெளியிடப்படும்?

Recruitment Board எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் 2020 ஆண்டுக்கான தேர்வு அட்டவணை (TRB Calendar 2020) தயாரித்து வருகிறது. வரும் 2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பணி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அட்டவணை டிசம்பர் மாதத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர் பணிக்கு தயாராகி வருவோர், இதை கவனத்தில் கொண்டு, அதற்கு ஏற்ப தயாராகும்படி அறிவுறுத்தப்படுகினறனர்.


தமிழக பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் பணித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 2 ஆயிரத்து 144 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதே போல், தற்போது அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2,331 உதவிப்பேராசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பப்பதிவு முடிந்துள்ளது. விரைவில் இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு, அதாவது 2020 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பணி தேர்வுகள் குறித்த தேர்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளது. முன்னதாக, அரசு பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகளில் விரிவுரையாளர்களை நியமிக்க 2017 ஆம் ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. ஆனால், அந்த தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக குற்றசாட்டு எழுந்தது. இதனால், விரிவுரையாளர்கள் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து அரசு பாலிடெக்னிக், இன்ஜினியரி்ங் கல்லூரிகளில் விரிவுரையாளர்களை நியமிக்க எந்த தடையும் இல்லை என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, அந்த பணியிடங்களையும் சேர்த்து புதிதாக காலியிடங்கள் நிரப்புவதற்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதுவரையில், தற்காலிக விரிவுரையாளர்களை நியமிக்கவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்தமாக அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் என அனைத்திலும் எத்தனை காலியிடங்கள் உள்ளது என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் சில நாட்களில் நிறைவு பெற்று விடும். இதே போல், 2020 ஆம் ஆண்டில் எப்போது, எந்த தேர்வுகள் நடத்தப்படும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரித்து வருகிறது. 2020 ஆசிரியர் பணித் தேர்வு அட்டவணை டிசம்பர் மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Post Top Ad