உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை 260 கோடி வயது:
திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள்.
அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.இந்தகாலத்திலேயே திருவண்ணாமலை தோன்றிவிட்டதுஎன்கிறார்
கள் ஆராய்ச்சியாளர்கள்.
திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள்என்றுமதிப்பிட்டுள்ளார்கள்.இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.
தீபதரிசன மண்டபம்:
அண்ணாமலையார்கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது.மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார்.இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர்.
இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.
கரும்புத்தொட்டில்:
அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில்.குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர்.
தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள்.
இவ்வாறுசெய்தால்,இன்னும் பல இனிய குழந்தைகளை அந்ததம்பதிகள்பெறுவார்
கள் என்பது ஐதீகம்.
மீனின் பெயர் செல்லாக்காசு:
திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர்.
இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து.
இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு.
அடேங்கப்பா!
இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால்,இதுஅந்தக்காலத்து மீன் சாமி!அபூர்வ இனம் சாமி, என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.
கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு.ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு.இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது.
இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானிகளெல்லாம்வழிபட்
டுள்ளனர்.உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது.
கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில்மாணிக்க மலையாகவும்,துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், இன்றையகலியுகத்தில்கல்மலையாகவும் விளங்குகிறது.
நந்திக்கு பெருமை:
மாட்டுப்பொங்கலன்று திருவண்ணாமலை கோயிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும்.
அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, கதம்பமாலை அணிவித்து பூஜை செய்வர்.
அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார்.
தனது வாகனமான நந்தியைப்பெருமைப்படுத்
தும் விதத்தில் சிவன் இவர் முன் எழுந்தருள்கிறார்.
அண்ணாமலை பொருள்: அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள்.
அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது என்பதாகும்.பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.
செந்தூர விநாயகர்:
ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம்.
ஆனால்,திருவண்ணாமலையில் விநாயகருக்கு செந்தூரம்பூசுகின்றனர்.
சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனதுரத்தத்தை உடலில்பூசிக்கொண்டார்.
இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில்ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்.