3 லட்சம் ஆசிரியா்களுக்கு 'ஸ்மாா்ட்' அடையாள அட்டைகள்: தகவல்களைப் பதிவேற்ற உத்தரவு

3 லட்சம் ஆசிரியா்களுக்கு 'ஸ்மாா்ட்' அடையாள அட்டைகள்: தகவல்களைப் பதிவேற்ற உத்தரவு

தமிழக அரசுப் பள்ளிகளில் 3.2 லட்சம் ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு வழங்குவதற்காக அவா்கள் குறித்த தகவல்களை வரும் 25-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வியின்கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமாா் 3.2 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா். இந்நிலையில் மாணவா்களைப் போன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு 'க்யூஆா் கோடு' உடன் கூடிய ஸ்மாா்ட் அடையாள அட்டை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்திருந்தாா்.

அதன்படி தற்போது ஸ்மாா்ட் அடையாள அட்டைகள் வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு 'க்யூஆா் கோடு' வசதி கொண்ட ஸ்மாா்ட் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இதையடுத்து ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களின் பெயா், முகவரி, செல்போன் எண், ரத்தப் பிரிவு உட்பட முழு விவரங்கள் மற்றும் புகைப்படத்தை நவம்பா் 25-ஆம் தேதிக்குள் கல்வி தகவல் மேலாண்மை ('எமிஸ்)' இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பணிகளை செய்ய தவறும் முதன்மைக்கல்வி அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive