Attendance App - எப்போது பதிவு செய்ய வேண்டும் - CEO அறிவுறுத்தல் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, November 25, 2019

Attendance App - எப்போது பதிவு செய்ய வேண்டும் - CEO அறிவுறுத்தல்

Attendance App - எப்போது பதிவு செய்ய வேண்டும் - CEO அறிவுறுத்தல்



வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார / குறு வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு,

இறைவணக்கம் கூட்டத்திற்கு முன்பாக பதிவு செய்தல் தவிர்த்தல்

EMIS பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க சென்னையில் மாவட்டம் வாரியான குழு பள்ளிக்கல்வித்துறையால் நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம் மாவட்ட EMIS பணிகளை தொடர்ந்து கண்காணித்து  வருகிறார்கள். அதனடிப்படையில் 22.11.2019 அன்று நமது மாவட்டத்திற்கு உட்பட்ட 4 தொடக்கப் பள்ளிகள் காலை 8 மணிக்கே பதிவு செய்துள்ளனர். 

இதனை இணை இயக்குநர் அவர்கள் கண்காணித்து வருகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட பள்ளியை பார்வையிடும் ஆசிரியர் பயிற்றுனர் இறைவணக்கம் கூட்டத்திற்கு முன்பாக மாணவர்களின் வருகை யினை பதிவு செய்தல் தவிர்த்தல் வேண்டும் என்ற தகவலினை தெரிவிக்க வேண்டும்.

ஏதேனும் பள்ளிகள் பதிவு செய்தல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளித்தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர்,

விழுப்புரம் மாவட்டம்.



Post Top Ad