அரசு ஊழியர்களே உஷார் - குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, November 25, 2019

அரசு ஊழியர்களே உஷார் - குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள்

அரசு ஊழியர்களே  உஷார் - குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள்



பண பரிமாற்ற செயலிகளை பயன்படுத்தும் அரசு ஊழியர்களின் கணக்கில் இருந்து பணம் சுரண்டும் ஹேக்கர்கள்' குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.வங்கி பணப்பரிமாற்றத்திற்கு பல்வேறு செயலிகள் புதிது, புதிதாக பிறக்கின்றன. 

'பிம், கூகுள் பே, போன்பே, பேடிஎம்., ரேசர் பே, மொபிகுவிக், பாக்கெட்ஸ், ஹாட்பார்ம்' உள்ளிட்ட செயலிகள் இவற்றில் சில.இந்த செயலிகள் மூலம் ஆன்லைன் வழியில் நொடியில் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். சமீப காலமாக சில செயலிகளை பயன்படுத்துவோரின் வங்கி கணக்கிலிருந்து பொருட்கள் வாங்கியதாக பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.

பழநியை சேர்ந்த பெயர் கூற விரும்பாத பெண் அரசு ஊழியர் ஒருவர் திண்டுக்கல் எஸ்.பி., அலுவலககத்தில், கூகுள் பே மூலம் தன்னுடைய கணக்கிலிருந்து ரூ.16 ஆயிரத்து 300 எடுக்கப்பட்டதாக புகார் தெரிவித்தார்.அவர் கூறும்போது, ''பழநியில் உள்ள பொதுத்துறை வங்கியில் கணக்கு வைத்துள்ளேன். 'கூகுள்பே' செயலியில் நான் யாருக்கும் பணம் அனுப்பாத நிலையில் திடீரென பணம் எடுக்கப்பட்டுள்ளது. 

வங்கியில் சென்று கேட்டால் எதுவும் தெரியாது என்கின்றனர். இதே போல் பல அரசு ஊழியர்களின் கணக்கில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை எடுக்கப்பட்டதாக வங்கியில் புகார் உள்ளது'' என்றார். திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.



Post Top Ad