கல்வியறிவு மன்றம்' பள்ளிகளில் துவக்க முடிவு : - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, November 20, 2019

கல்வியறிவு மன்றம்' பள்ளிகளில் துவக்க முடிவு :

'கல்வியறிவு மன்றம்' பள்ளிகளில் துவக்க முடிவு :


தேர்தல் நடைமுறை குறித்து, மாணவர்கள் இடையே, விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிகளில், 'தேர்தல் கல்வியறிவு மன்றம்' அமைக்க, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிகளில், 'தேர்தல் கல்வியறிவு மன்றம்' அமைக்கப்பட உள்ளது. அதன்படி, தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும், தேர்தல் கல்வியறிவுமன்றம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, கோவை, வேலுார், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மையங்களில், தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.வரும், 22ம் தேதி, வேலுாரில் நடக்கும் பயிற்சி வகுப்பில், சென்னை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், வேலுார், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த, தேர்தல் பிரிவு சிறப்பு தாசில்தார், தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.


மாவட்ட அளவில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட பின், அனைத்து பள்ளிகளிலும், தேர்தல் கல்வியறிவு மன்றம் துவங்கப்படும். ஒரு பள்ளிக்கு, நான்கு பேர் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். மன்றம் சார்பில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாணவர்களுக்கு தேர்தல் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் வாயிலாக, வருங்காலங்களில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு இலக்கை அடைய முடியும் என, தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.


Post Top Ad