``அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தியாகத்தை நாம் புரிந்துகொள்வதே இல்லை!" - `விப்ரோ' அஸிம் பிரேம்ஜி
மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன், அமால்கமேஷன்ஸ் குழுமம் இணைந்து நடத்திய 'எம்.எம்.ஏ - அமால்கமேசன்ஸ் பிசினஸ் லீடர்ஷிப் அவார்ட் 2019" விருது வழங்கும் விழா, அண்மையில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில், விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜிக்கு 19-வது எம்.எம்.ஏ - அமால்கமேஷன்ஸ் பிசினஸ் லீடர்ஷிப் விருதையும், பாராட்டுச் சான்றிதழையும் அமால்கமேஷன்ஸ் குழுமத்தின் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். விரிவாக படிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2XMMvY0
விருதைப் பெற்ற பிறகு ஏற்புரை வழங்கிய அஸிம் பிரேம்ஜி, உரையின் தொடக்கத்தில் த\ன் அம்மாவை நினைவுகூர்ந்தார். "மருத்துவராக இருந்த என் அம்மா, போலியோ போன்ற எலும்பு தொடர்பான வியாதிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக ஓர் அறக்கட்டளை மருத்துவமனையை நடத்திவந்தார். ஆசியாவிலேயே அதுதான் முதல் சிறப்பு மருத்துவமனை. என் அம்மா, தன் 78 வயதிலும் அந்த மருத்துவமனையின் தலைவராக இருந்து, தன் வாழ்நாள் முழுக்க அர்ப்பணிப்போடு செயல்பட்டார்.
என் அம்மாவின் கருணையுள்ளமும், காந்தியடிகளின் கொள்கைகளும் என்னை ஈர்த்ததால்தான் எனக்குச் சமூக முன்னேற்றத்துக்கான செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்பட்டது.
'செல்வந்தர்களாக இருப்பவர்களுக்கு, செல்வத்தை அறச்செயல்களுக்காகக் கொடையாக வழங்கும் குணமும் இருக்க வேண்டும்" என்றார் மகாத்மா காந்தி. செல்வந்தர்களாக இருப்பவர்கள், மக்கள்நலனுக்காகத் தங்கள் செல்வத்தின் ஒரு பகுதியைச் செலவிடுவது மிக மிக முக்கியமான ஒன்று.
என் அம்மாவின் கருணையுள்ளமும், காந்தியடிகளின் கொள்கைகளும் என்னை ஈர்த்ததால்தான் எனக்குச் சமூக முன்னேற்றத்துக்கான செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்பட்டது. ஒரு தொழிலதிபர் பிசினஸ் லீடராக மட்டுமிருந்தால் போதாது; மாரல் லீடராக அதாவது, அறம் சார்ந்த தலைவராக விளங்க வேண்டும் என்பதை காந்தியிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தியாகத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்வதே இல்லை. அவர்களில் 80% பேர் அர்ப்பணிப்பு உணர்வுடனேயே பணியாற்றுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தற்போது மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டு நடந்துகொண்டிருக்கிறது. அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். எல்லோருமே அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார் அஸிம் பிரேம்ஜி.
அமால்கமேஷன்ஸ் நிறுவனம் நடத்தும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விருதைப் பெற அஸிம் பிரேம்ஜி சென்னைக்கு வந்ததும் பெருமை வாய்ந்தது என்பதால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தொழில்துறையைச் சார்ந்த பலரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தது சிறப்பு.
அவர்களில் முக்கியமானவர்கள் பேசியதன் சிறப்பு அம்சங்களை நாணயம் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > விப்ரோ அஸிம் பிரேம்ஜி... "செல்வந்தர்கள் மக்கள்நலனுக்கு செலவழிக்க வேண்டும்!" https://www.vikatan.com/news/general-news/mma-amalgamations-business-leadership-awards-2019-highlights
அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo