பள்ளி வேலை நாட்களை திட்டமிடல்!
திருச்சி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு:
திருச்சி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நவம்பர் மாதம் வரை 116 வேலை நாட்கள் வருகிறது.
டிசம்பர் முதல் ஏப்ரல் 20 வரையிலான காலத்தில், அரசு விடுமுறைகள், பருவத் தேர்வு விடுமுறைகள் மற்றும் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு தவிர்த்து பள்ளி வேலை நாட்களை கணக்கிட்டுப் பார்த்தால், கீழ்க் கண்ட விவரப் படி அமையும்.
நவம்பர் வரை 116
டிசம்பர் 16
ஜனவரி 19
பிப்ரவரி 20
மார்ச் 21
ஏப்ரல் 11
ஆக மொத்தம் பள்ளி இறுதி வேலை நாளான ஏப்ரல் 20 அன்று, 203 வேலை நாட்களே பள்ளி இயங்கியதாக கணக்கு வரும்.
இதை நிவர்த்தி செய்ய 7 சனிக்கிழமைகள் பள்ளி வேலை செய்தாக வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில் ஜனவரி மாதம் வைகுண்ட ஏகாதசி, ஏப்ரல் மாதம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா மற்றும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் தேர்த்திருவிழா போன்ற விழாக்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம்.
சில கிராமங்களில் தை மாதம் முதல் அறுவடைத் திருவிழா என்ற வகையில் உள்ளூர் கிராமக் கோவில் திருவிழாக்கள் நடைபெறும்.
இந்த விழாக்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம்.
இது மட்டுமின்றி உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் இறுதி வாரத்தில் முதல் கட்டமாகவும், ஜனவரி மாதம் இரண்டாம் கட்டமாகவும் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டாம் கட்டத் தேர்தல் பள்ளி வேலை நாட்களில் நடைபெற்றால், பள்ளி வேலை நாட்கள் இன்னும் குறைய வாய்ப்புள்ளது.
ஆகவே, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தற்போதே பள்ளி வேலை நாட்களை கணக்கீடு செய்து, அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படா விட்டால், ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை, அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்க வேண்டிய சூழலுக்கு உட்பட நேரும்.
ஆகவே தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளி வேலை நாட்களை கணக்கீடு செய்து, ஏப்ரல் 20 ஆம் தேதி 210 வேலை நாட்கள் என்ற இலக்கை அடைய, தற்போதே திட்டமிட்டு, வட்டாரக் கல்வி அலுவலர்களின் அனுமதி பெற்று குறைவுபடும் நாட்களுக்கு ஏற்ப, சனிக்கிழமைகளில் பள்ளி இயங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது நன்று.