புதிய மாவட்டங்கள் உதயம் வாழ்த்துக்கவிதை - ஆசிரியர் திரு சீனி.தனஞ்செழியன்
புதிய உதயங்கள்
வேலூர் தாயின் தொப்புள்கொடியிலிருந்து உயிர்ப்பெற்றது இருமாவட்டக் குழந்தைகள்
புரட்சியின் சொந்தக்காரி போர்க்குண வித்துக்காரி என்பதால்
ஒரே தருணத்தில் இரட்டைக்குழந்தைக்குத் தாயாகி நிற்கிறாள்
வீரம் விளந்த மண்ணில்
இராணியொருத்தி மகுடம் சூட
மலைமுகட்டின் அடியொற்றி திருப்பத்தூரானும் உதயமாகி விட்டான்
இஃதொரு விசித்திர விடியல்
கிழக்கிலும் மேற்கிலுமாய் புதியதோர் உதயம்
இவ்வளவு நாளாய் தாங்கி நின்ற மையப்புள்ளி அவள்
அவளன்பிற்கு என்றுமே வைக்க இயலாது முற்றுப்புள்ளி
இருகண்களின் இடையிலவள் எப்போதும் நெற்றிக்கண்ணே
எங்கள் வேர்நிலம் எப்போதும் வீரம்விளைந்த அவள் மண்ணே
பிள்ளைகள் தழைக்க
வழிகோலிய உனக்கு எங்கள் ஆயிரம் வந்தனங்கள்
நீ
ஒன்றை இரண்டாக்கியவள்
இப்போது
ஒன்றையும் முத்தமிழ்போல் மூன்றாக்கிய வசியக்காரி
தாய்ப்பிள்ளை உறவெப்போதும் மாறாது
இருப்போம் நாங்களும் நன்றி மறவாது
இனிய குழந்தைகளுக்கு இன்று பெயர் சூட்டு விழா
அனைவரும் திரளாய் பங்கெடுப்போம் நம் குடும்ப விழாவில்
புத்தொளி பரவட்டும் நம் அனைவரின் வாழ்வில்
இன்ற வேலூரில் இருந்து இராணிப்பேட்டை, திருப்பத்தூர் புதிய மாவட்டங்களின் உதய விழா
நிறைய அன்புடன்,
சீனி.தனஞ்செழியன்,
முதுகலைத்தமிழாசிரியர்,
அஆமேநிப, திருவலம்.
வேலூர் மாவட்டம்.
0 Comments:
Post a Comment