சம்பள பட்டியலை திருப்பி அனுப்ப வேண்டாம்' பூஜா குல்கர்னி கடிதம்

சம்பள பட்டியலை திருப்பி அனுப்ப வேண்டாம்' பூஜா குல்கர்னி கடிதம்

 'அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை, தேவையில்லாமல் திருப்பி அனுப்ப வேண்டாம்' என, கருவூலத்துறை செயலருக்கு, நிதித்துறை சிறப்பு செயலர் பூஜா குல்கர்னி கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 2017ல் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அந்த புதிய ஊதிய விகிதத்தில் முரண்பாடுகள் இருந்தன. அவற்றை களைய, அரசாணை பிறப்பிக்கப் பட்டது. அதன்பின், சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர்கள், சில விபரங்களை கேட்டு, அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை திருப்பி அனுப்புவதாக, நிதித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.ஊதிய முரண்பாடுகளை களைய, உரிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. 

எனவே, தேவையின்றி, அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை திருப்பி அனுப்ப வேண்டாம் என, கருவூலத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடுங்கள்.இவ்வாறு, பூஜாகுல்கர்னி கூறியுள்ளார்.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive