ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளி கல்வி அமைச்சரும் செயலரும் புதிய விளக்கம்! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, November 28, 2019

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளி கல்வி அமைச்சரும் செயலரும் புதிய விளக்கம்!

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளி கல்வி அமைச்சரும் செயலரும் புதிய விளக்கம்!



பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் முதன்மை செயலர் பிரதீப் யாதவ் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசின் உத்தரவுப்படி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகட்டாயம் நடத்தப்படும்.ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு எந்த மாணவரின் தேர்ச்சியும்நிறுத்தி வைக்கப்படாது.

 அதாவது தேர்வு எழுதும் அனைவரும் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர். பொதுத் தேர்வை பொருத்தவரை ஐந்தாம் வகுப்புக்கு தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கு மட்டும் நடத்தப்படும். மற்ற பாடங்களுக்கு பொதுத் தேர்வு கிடையாது; சாதாரண தேர்வு நடத்தப்படும்.எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம்,அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் பொது தேர்வு நடத்தப்படும். தேர்வு மையங்கள் மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே ஏற்படுத்தப்படும்.வேறு பள்ளிக்கு செல்ல தேவையில்லை. ஐந்து மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளில் படிப்போர் மட்டும் வேறு பள்ளிகளுக்கு தேர்வு எழுத செல்லவேண்டியிருக்கும்.இந்த தேர்வை பார்த்து பெற்றோரும் மாணவர்களும் பீதியடையவேண்டாம். வினாத்தாள் எளிதாக இருக்கும். அந்தந்த பள்ளிகளிலேயே வினாத்தாள் வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.



Post Top Ad