புதுடெல்லியில் மைக்ரோசாப்ட் கல்வி மேளாவில் தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கௌரவிப்பு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, November 21, 2019

புதுடெல்லியில் மைக்ரோசாப்ட் கல்வி மேளாவில் தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கௌரவிப்பு!

புதுடெல்லியில் மைக்ரோசாப்ட் கல்வி மேளாவில் தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கௌரவிப்பு!



ஆண்டுதோறும் மைக்ரோசாப்ட் நிறுவனம் பள்ளி ஆசிரியர்களுக்காக நடத்தப்பெறும் இணையவழியிலான பாடப் பயிற்சியில் தேர்ச்சி பெற்று பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் புள்ளிகள் ஆகியவற்றை தேர்வர்களுக்கு வழங்கி வருகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்க மைக்ரோசாப்ட் கல்விப் புத்தாக்கக் கல்விப் பயிற்றுநர் (Microsoft Innovative Education's Educator) சான்று பெற்றவர்களின் கல்வி மற்றும் பயிற்சி சார்ந்த அனுபவங்களை நேரிடையாக ஏனையோருக்குக் கிடைக்கச் செய்யும் பொருட்டு தேசிய அளவில் புதுடெல்லியில் காரகோன் பகுதியில் நாடு முழுவதிலும் இதுபோன்று தேர்வு செய்யப்பட்டவர்களைத் தம் சொந்த செலவில் விமானப் பயணம் மேற்கொள்ள செய்தும் ஐந்து நட்சத்திர சொகுசு விடுதியில் தங்க வைத்தும் விருந்தளித்தும்  '21 ஆம் நூற்றாண்டின் புதுமைக் கற்றலில் மைக்ரோசாப்ட்டின் பங்கு' என்னும் தலைப்பில்  கடந்த நவம்பர் 19, 20 ஆகிய இரண்டு நாள்கள் கல்வி மேளா (Edu Days) திருவிழாவினைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தது.

தேசிய அளவில் நடக்கும் இந்தக் கல்விக் கருத்தரங்கு மற்றும் திருவிழாவில் கற்றல் மற்றும் கற்பித்தலில் பல்வேறு புதுமைகள் படைத்து வரும் சற்றேறக்குறைய 120 ஆசிரியர் பெருமக்களிடமிருந்து உலக அளவிலான பல்வேறு கற்றல் செயல்திட்ட ஆய்வுகள் குழுவாக ஆறுவகையான தலைப்புகளில் 18 குழுவினரால் பெறப்பட்டு அவற்றை உலகளவிலான தேர்வுக்குழுவினர் மற்றும் பார்வையாளர்கள் மூலம் தலைசிறந்த குழு ஆய்வு செயல்திட்டத்திற்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டு தெரிவிக்கப்பட்டன. இதற்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்ட  எட்டு அரசுப்பள்ளி ஆசிரியர்களான,

1) முனைவர் மணி கணேசன் பட்டதாரி ஆசிரியர் மேலகண்டமங்கலம் திருவாரூர் மாவட்டம்.

2) முனைவர் ப.இரமேஷ் இடைநிலை ஆசிரியர் கருநிலம் காஞ்சிபுரம் மாவட்டம்.

3) தேசிய விருதாளர் S.திலீப் பட்டதாரி ஆசிரியர் அரசினர் மேனிலைப்பள்ளி சத்தியமங்கலம் விழுப்புரம் மாவட்டம்.

4) தேசிய விருதாளர் P.கருணைதாஸ் பட்டதாரி ஆசிரியர் அரசினர் மேனிலைப்பள்ளி நாரணபுரம் விருதுநகர் மாவட்டம்.

5) மாநில விருதாளர் சு.மனோகர் இடைநிலை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வெள்ளியணை தாந்தோணி ஒன்றியம் கரூர் மாவட்டம்.

6) ஒளிரும் ஆசிரியர் விருதாளர் K.சரவணன் பட்டதாரி ஆசிரியர் நகராட்சி நடுநிலைப்பள்ளி பெத்லேகம் ஆம்பூர் நகராட்சி வேலூர் மாவட்டம்.

7) ஆசிரியர் பயிற்றுநர் கி.ஐயப்பன் காடையாம்பட்டி சேலம் மாவட்டம்.

8) கனவு ஆசிரியர் விருதாளர் இரா. இளவரசன் பட்டதாரி ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வேடப்பட்டி அயோத்தியாபட்டணம் ஒன்றியம் சேலம் மாவட்டம்.

ஆகியோர் தங்களது குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுச் செயல்திட்டங்களுக்காகப் பாராட்டுப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவற்றுள் முனைவர் மணி கணேசன் மற்றும் இரா.இளவரசன் ஆகியோரின் இருவேறு படைப்புகளுக்கு முதலிடம் கிடைத்தது. நிகழ்ச்சியில் மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன இணை இயக்குநர் மற்றும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு இராஜீவ் கௌடா ஆகியோர் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தனர். தேசிய விருதாளர் P.கருணைதாஸ் அவர்களின் மினிபைட் ராக்கெட் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் சிறப்புப் பாராட்டு தெரிவித்தது. அதேபோல் மற்றுமொரு தேசிய விருதாளர் ஶ்ரீ.திலீப் அவர்கள் தம் செயல்திட்டம் குறித்து அளித்த விளக்கம் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது



Post Top Ad