சி.பி.எஸ்.இ., தேர்வில் புதிய மாற்றங்கள்

'சி.பி.எஸ்.இ., தேர்வில் புதிய மாற்றங்கள்



மாணவர்களின் படைப்பு திறன், பகுத்தாயும் திறன் போன்றவற்றை ஊக்குவிக்கும் வகையில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம் நடத்தும், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு முறைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

தொழில் கூட்டமைப்பான, 'அசோசெம்' சார்பில் டில்லியில் கல்வி தொடர்பான மாநாடு நடைபெறுகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, சி.பி.எஸ்.இ., செயலர் அனுராக் திரிபாதி பேசியதாவது:மாணவர்களின் படைப்பு திறன், பகுத்தாயும் திறன் போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும். அதன்படி, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு முறைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.இந்தாண்டு, 10ம் வகுப்புக்கான தேர்வில், 20 சதவீத கேள்விகள் திறனறி அடிப்படையில் இருக்கும். இதைத் தவிர, மாணவரின் படைப்புத் திறனை கண்டறியும் வகையில், 10 சதவீத கேள்விகள் இருக்கும்.

இதுபடிப்படியாக உயர்த்தப்பட்டு, 2023ல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் -2 தேர்வில், மாணவரின் திறன்களை அடையாளம்காணும் வகையில், தேர்வு முறை இருக்கும்.தொழில்முறை பாடங்களை சந்தைப்படுத்தும் வகையில், மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.








0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive