திருமண பத்திரிக்கை அச்சிடும் போது கவனத்தில் கொள்வோம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, November 26, 2019

திருமண பத்திரிக்கை அச்சிடும் போது கவனத்தில் கொள்வோம்

திருமண பத்திரிக்கை அச்சிடும் போது கவனத்தில் கொள்வோம்

திருமண அழைப்பிதழில் மணமக்கள் பெயருக்கு முன்னாள்


🍁திருவளர்ச்செல்வன்/செல்வி என்றால் அது அந்தக் குடும்பத்தின் மூத்த மகன்/மகளின் திருமணமாகும்.

🍁 திருநிறைச்செல்வன்/செல்வி என்றால் இளைய மகன்/மகளின் திருமணமாகும்.

🌱திருவளர்ச்செல்வன்/செல்வி எனும் போது, "திருமணம் நிகழவிருக்கும் எங்கள் மகன்/மகளுக்கு, இளைய சகோதர/சகோதரிகள் உள்ளனர். இது எங்கள் இல்லத்தின் முதல் திருமணம் ஆகும்.

எங்கள் இளைய குமாரன்/குமாரிக்குத் திருமண வயது நிரம்பும் போது, உங்கள் மகன்/மகளுக்கு, திருமண வயது நிரம்பி இருந்தால், வரன் கேட்டு வரலாம்," என்பதைப் பெரியவர்கள் நினைவில் கொள்ள, மறைமுகமாகத் தெரிவிப்பதாகும்.

🌳திருநிறைச்செல்வன்/செல்வி என்றால் எங்கள் இல்லத்தில் திருமணங்கள் நிறைவுற்றன, இத்திருமணமே இறுதியானதாகும், இனி எங்கள் இல்லத்தில் மணமக்கள் யாரும் இல்லை என்று பொருள்படும்.

👆



Post Top Ad