EMIS Flash News - மாணவர்களது வருகைப் பதிவுக்கு புதிய மொபைல் ஆப்! எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? எவ்வாறு பயன்படுத்துவது? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, November 28, 2019

EMIS Flash News - மாணவர்களது வருகைப் பதிவுக்கு புதிய மொபைல் ஆப்! எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? எவ்வாறு பயன்படுத்துவது?

EMIS Flash News - மாணவர்களது வருகைப் பதிவுக்கு புதிய மொபைல் ஆப்! எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? எவ்வாறு பயன்படுத்துவது?


மாணவர்களது வருகைப் பதிவுக்கு புதிய மொபைல் ஆப் TN EMIS என்ற செயலியினை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பழைய செயலியில் வருகையினை பதிவு செய்ய ஆசிரியர்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் இருந்துவந்தது. இனி ஆசிரியர்கள் தங்களது பழைய  ஆப்பினை Uninstall செய்துவிட்டு பின்வறும் Link-ஐ கிளிக் செய்து புதிய ஆப்பினை பதிவிறக்கம் செய்து மாணவர்களது வருகையினை பதிவு செய்ய பயன்படுத்தவும்.

எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?  

கீழ் உள்ள Link-ஐ கிளிக் செய்து Play Store -ல் செயலினை இன்ஸ்டால் செய்யவும்.

EMIS ONE PLAY STORE LINK - DOWNLOAD ..

எவ்வாறு பயன்படுத்துவது?

பதிவிறக்கம் செயததும் Open செய்யவும்.

Open ஆனதும் Login ID,  password என்ற பகுதி தோன்றும்.

அதில் Login ID என்பதில் உங்களது பள்ளியின் 11 இலக்க Dise எண்ணையும்,  Password என்பதில் உங்களது பள்ளியின் EMIS Password -ஐயும் கொடுத்து Sing in கொடுத்து உள் நுழையவும்.

அதில் Attendance,  TNTP என்று இரண்டு பகுதிகளில் Attendance என்பதை கிளிக் செய்யவும்.அதில் உங்களது பள்ளியின் விவரங்கள் தோன்றும்.

பின் வலது மேல்புறத்தில் + என்ற உள்ளதை கிளிக் செய்யவும்.

அதில் வகுப்பு வாரியாக கிளிக் செய்தால் மாணவர்கள் பட்டியல் வரிசையாக இருக்கும். அதில் மாணவர்களுக்கு நேர் பகுதியில் P என்று இருக்கும்,  மாணவர் வந்திருந்தால் அதை மாற்றம் செய்ய தேவை இல்லை,  மாணவர் வரவில்லை என்றால் மட்டுமே அதனை கிளிக் செய்து A என்று மாற்றிக்கொள்ளவும்.

பின்பு அனைத்து மாணவர்களது வருகையினை சரிபார்த்து கடைசியாக கீழ் SAVE என்பதை கிளிக் செய்யவும்.

இவ்வாறு அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு வருகைப் பதிவினை பதிவிடவும்.


Post Top Ad