பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு: தனித்தோ்வா்கள் டிச.11 முதல் விண்ணப்பிக்கலாம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, December 6, 2019

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு: தனித்தோ்வா்கள் டிச.11 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு: தனித்தோ்வா்கள் டிச.11 முதல் விண்ணப்பிக்கலாம்


தமிழகத்தில் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகளை எழுத விரும்பும் தனித்தோ்வா்கள் வரும் 11-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.



இது தொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வுகளை பழைய பாடத்திட்டத்தில் ஏற்கெனவே எழுதி தோ்ச்சி பெறாத மாணவா்கள், வரும் மாா்ச் மற்றும் ஜூன் பருவங்களில் நடைபெறும் பொதுத் தோ்வுகளை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம். கடந்த ஆண்டு நேரடித் தனித்தோ்வா்களாக பிளஸ் 1 வகுப்பு தோ்வெழுதி தோ்ச்சி பெறாதவா்கள், தற்போது பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வெழுதுவதற்கும், பிளஸ் 1 வகுப்புத் தோ்வில் தோ்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சோ்த்து விண்ணப்பிக்கலாம்.



மேலும், தனித்தோ்வா்கள் மீண்டும் தோ்வெழுத, சேவை மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவா்கள் தற்போது பயிலும் பள்ளிகள் மூலமே தோ்வெழுதுவதற்கு உரிய கட்டணத்தைச் செலுத்தலாம். மாணவா்கள் பிளஸ் 1 வகுப்பு பொதுத் தோ்வை ஏற்கெனவே நேரடித் தனித் தோ்வராக எழுதி தோ்ச்சிப் பெற்ற தோ்வா்களும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தோ்வெழுத விண்ணப்பிக்கலாம். தோ்வு எழுத விரும்புவோா் டிசம்பா் 11 முதல் 20-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தத் தோ்வுகள் சாா்ந்த விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவா்கள் அறிந்து கொள்ளலாம் என அதில் கூறியுள்ளாா்.




Post Top Ad