மகிழ்ச்சியாக இருக்க பின்பற்றக்கூடிய 20 வழிகள் !

மகிழ்ச்சியாக இருக்க பின்பற்றக்கூடிய 20 வழிகள் !

1. எல்லோரையும் கொண்டாடுங்கள்!

உங்களைச்சுற்றி இருக்கும்ஒவ்வொரு விஷயங்களையும்கூர்ந்து கவனியுங்கள்..

 சாலையில் நடக்கும் போது, எரிச்சலை ஏற்படுத்தும்போக்குவரத்து நெரிசலைபார்த்திருப்பீர்கள்.

 அதே சாலையின் ஓரத்தில்பூத்துக்குலுங்கும் மலர்களைரசித்திருக்க மாட்டீர்கள்.

 சுள்ளென சுட்டெரிக்கும், வெயிலைவெறுத்திருப்பீர்கள்..

அதேகதிரவன் காலையில்உதிக்கும் அழகை ரசித்திருக்கமாட்டீர்கள்.

நமதுமனம் மிகவும் ரசனை மிக்கது.

ஆனால் நீங்கள்தான் ரசனைஅற்றவராக இருக்கிறீர்கள்.

 உங்களை சுற்றியிருக்கும் மனைவி, நண்பர்கள், குழந்தைகள் எனஎல்லாரையும்ரசியுங்கள்..கொண்டாடுங்கள்..மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது..

2.நல்ல நண்பர்களைசம்பாதியுங்கள்!

உளவியல் ஆய்வின் படி, ஒருவரின்மனதின் மகிழ்ச்சியை அவரைசுற்றியிருக்கும் விஷயங்களேமுடிவு செய்கின்றன.

 எனவே, மிகவும் மகிழ்ச்சியானநண்பர்கள், உங்களுக்குஊக்கமளிக்கும் நண்பர்கள், உங்களை குறைசொல்லாத, உங்களை நம்பிக்கையைசிதைக்காத நண்பர்களுடனேயேநேரத்தை செலவிடுங்கள்..!

 இது உங்கள் பாசிட்டிவ் எனர்ஜியைகுறைக்காமல் வைத்திருக்கும்.

3.அக்கறையைவளர்த்துக்கொள்ளுங்கள்!

நீங்கள் எதிர்பாராத சமயத்தில், அடுத்தவரின் வாழ்க்கையில்நுழையும் போது, அவர்கள் மீது, அக்கறையைவளர்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் வேலைக்கு சேர்ந்த இடம், புதிய குடியிருப்பு, திருமணம் எனஎல்லா இடத்திலும் இது பொருந்தும்.

 நமது இடத்திற்கு ஏற்ப, நமதுஅக்கறையை, அன்பை நாம்பிறர்மீது வளர்த்துக்கொண்டால், செல்லுமிடமெல்லாம் மகிழ்ச்சிக்குகுறைவிருக்காது.

4. கற்றுக்கொள்வதைநிறுத்தாதீர்கள்!

“வாழ்க்கையில் எப்போதும், கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள்.

 ஏனெனில் வாழ்க்கை உங்களுக்குகற்றுக்கொடுப்பதை நிறுத்தாது” என்ற பிரபல வாசகத்தை நீங்கள்கேட்டிருக்கலாம்.

 அது முற்றிலும் உண்மை.

 ஆய்வின் படி, நீங்கள் புதியவிஷயங்களை கற்றுக்கொண்டேஇருப்பதன் மூலம், உங்களை மூளைஎப்போதும் சுறுசுறுப்புடன்இருக்கும்.

 இதனால் உங்களது துன்பநினைவுகளை அது அசைபோடாதுஎப்போதும் பிசியாக இருக்கும்.

எனவேமனம் எப்போதும், மகிழ்ச்சியாக இருக்கும்.

5. தடை..அதை உடை.!

எப்போதும், எந்த இடத்திலும்பிரச்சினைகளே இருக்கக்கூடாதுஎன நினைக்காதீர்கள்.

 எந்த பிரச்சினை வந்தாலும், அதனை தாங்கும் வலிமைவளரவேண்டும் என நினையுங்கள்.

 நீங்கள் பிரச்சினைகளைவெற்றிகரமாக எதிர்கொள்ள, எதிர்கொள்ள உங்கள்தன்னம்பிக்கை தானாகஅதிகரிக்கும்.

 வருங்காலத்தில் உங்கள் முன்புஎந்த பிரச்சினை வந்தாலும், “இதைஎப்படி சமாளிக்கப்போகிறோம்? “ என்ற கேள்வி வரவே வராது.

இந்ததிறமையைவளர்த்துக்கொண்டால், பிரச்சினைகளால், உங்களுக்குபிரச்சினை இல்லை.

6.நினைத்தை முடிக்கவும்!

நமக்கு பிடித்த விஷயங்களைசெய்யம்போது, நமது மனம்அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கும். பல பேருக்கு, வாழ்க்கையின் மீதுவெறுப்பு வர, பிடிக்காத வேலையைதினமும் செய்து கொண்டிருப்பதேகாரணமாக இருக்கும்.

அதைவேண்டாம் என தவிர்க்கவும்நம் பொருளாதார சூழல் இடம்தராது.

அதேசமயம் உங்களுக்கு பிடித்தசினிமா பார்ப்பதையே, புத்தகம்படிப்பதையோ, பயணம்செல்வதையோ யாராலும் தடுக்கமுடியாதே?

 இவற்றை அடிக்கடிசெய்யுங்கள்..மகிழ்ச்சி மெல்லமெல்ல அதிகரிக்கும்.

7.எது நடந்ததோ, அது நன்றாகவேநடந்தது!

நீங்கள் அடிக்கடி கவலைப்படும்நபராக இருந்தால், நீங்கள் உங்கள்கடந்த காலத்தையேநினைத்துக்கொண்டுஇருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

 உங்களது சோக நினைவுகள்உங்களுக்கு வருத்தத்தைதந்தாலும், அவை நடந்து முடிந்தவிஷயங்கள்.


 அவற்றை உங்களால் மாற்றவும்முடியாது.

எனவேஇல்லாத, கடந்த காலத்தைநினைத்து, நிகழ்கால மகிழ்ச்சியைஇழக்காமல், நிகழ்காலத்தில்வாழுங்கள்.

 நடப்பதை மட்டுமே நினையுங்கள்..

 பாதி கவலைகள் பறந்தோடும்.

8.அடிக்கடி சிரியுங்கள்!

அடுத்த நொடி, என்ன நடக்கும்என்பது கூட தெரியாத, நிச்சயமற்றவாழ்க்கைதானே நாம் வாழ்வது?

 இதில் ஏன் இவ்வளவு சிக்கல்களைஉருவாக்கிக்கொண்டு அழவேண்டும்?

 எப்போதும் சிரிப்பது ஒன்றும்கஷ்டமான வேலை இல்லையே..

 நகைச்சவை உணர்வுகொண்டவராகமாற்றிக்கொள்ளுங்கள்..முடியவில்லையா? ஒரு நகைச்சுவை படம்பார்க்கலாம்.

 ஹியூமர் நிரம்பி வழியும்நண்பர்களுடன் பேசலாம்..சிரிப்புநமக்கு கிடைத்திருக்கும்பரிசு..அதைப்பயன்படுத்துங்கள்.. அதுதான் உங்கள் கோபத்தை, விரக்தியை விரட்டும் மருந்து.. பின்பற்றி பாருங்கள்..உங்கள்துன்பத்திலும் சிரிப்பதற்கானகாரணம் கிடைக்கும்..

9.மன்னிக்க கற்றுக்கொள்வோம்!

கோபம் என்பது அடுத்தவர்களின்தவறுக்காக, நமக்கு நாமேகொடுத்துக்கொள்ளும்சுயதண்டனை.

 அதை ஏன் அடிக்கடி அனுபவிக்கவேண்டும்?

 பதிலாக அவர்களைமன்னித்துப்பாருங்கள்.. உங்கள்மனமும் மகிழும்..உங்கள் குணமும்வளரும்.. தவறு செய்யாதவர்கள்யாருமே இல்லைதானே?

 எனவேமன்னிப்போம்..மறப்போம்..எனஇருந்தால், உங்கள் மதிப்பையும், மகிழ்ச்சியையும் இது இன்னும்அதிகாரிக்கும்தானே !

10.நன்றி சொல்வது, நன்று!

உங்களை சுற்றியிருப்பவர்களிடம்அடிக்கடி நன்றிசொல்லுங்கள்..அவர்கள் செய்யும்சிறிய உதவியோ, பெரிய உதவியோஅதனைப் பாராட்ட மறக்காதீர்கள். நன்றி சொல்ல மறக்காதீர்கள்.

11.உறவின் ஆழம் அதிகரிக்கட்டும்!

வீடு, அலுவலகம், சுற்றம் எனசமூகத்தில் பல பேரிடம் நாம்இணைந்தே வாழ்கிறோம்.

 அப்படி நாம் கொண்டுள்ளசொந்தங்களில், நெருக்கமானஉறவுகளுடன் நேரம் செலவிடும்போதே, அதிக மகிழ்ச்சிஅடைகிறோம். அப்படி நெருக்கமானமனிதர்களை அதிகம்வளர்த்துக்கொள்ளுங்கள்.

 மற்றவர்களிடம் பேணும் உறவில், இந்த நெருக்கத்தை அதிகரிப்பதன்மூலம், உற்சாகம் அதிகமாகும்.

12.கொள்கையில் உறுதி வேண்டும்!

நீங்கள் விரும்பிய செயல்களை, செய்து முடிக்க வேண்டும் எனமுடிவெடித்திருக்கும் செயல்களைஎப்பாடு பட்டாவதுசெய்துமுடித்துவிடுங்கள். அந்தஉறுதிதான் உங்கள் மீதான, தன்னம்பிக்கையை உங்களிடம்அதிகம் வளர்க்கும். இதில்ஒவ்வொரு முறை தோல்வியடையும்போதும், உங்கள் நம்பிக்கையின்அளவும் குறையும்.

13.தியானம் நல்லது!

ஆய்வின் படி, தியானம்செய்பவர்களின் மூளையில் , தியானம் செய்யாதவர்களின்மூளையை விட, கற்றுக்கொள்ளும்திறனும், நினைவாற்றல் திறனும்20 சதவீதம் அதிகரிக்கிறது. எனவேதினமும் கொஞ்ச நேரம் தியானம்செய்யலாமே !

14.செய்வதை திருந்தச்செய் !

நீங்கள் எந்த வேலைவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அதில் உங்கள் மனமும், உடலும் ஒன்றி இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் மனம்தேவையற்ற சிந்தனைகள் பற்றிநினைக்காது. தேவையற்றசிந்தனைகள் மூளையைகுழப்பாமல் இருந்தாலே, மகிழ்ச்சியும் குறையாது.

15. நம்பிக்கை..அதானே எல்லாம்!

வாழ்க்கையில், தோல்விகள்வந்தாலும் கூட, அதில் இருக்கும்எதிர்மறை விஷயங்களைவிட்டுவிட்டு, நேர்மறையாகரசியுங்கள்.

 இந்தியா- ஆஸ்திரேலியாபோட்டியில், இந்தியாதோற்றுவிட்டது என்றால், அதுஎதிர்மறை சிந்தனை. இந்த முறைஆஸ்திரேலியா ஜெயித்துவிட்டதுஎன நினைத்தால், அதுதான்நேர்மறை சிந்தனை. இந்தகுணத்தை மட்டும்வளர்த்துகொண்டால், உங்கள்நம்பிக்கை அதிகரிக்கும். தோல்விகள் கற்றுக்கொடுக்கும்பாடங்கள் அதிகரிக்கும். அப்படியே, மகிழ்ச்சியும் !

16. ஆதலால் அதிகம் காதல் செய்!

நீங்கள் விரும்புவது போன்று, மனிதர்கள் வேண்டுமென்றால், இந்த உலகில் யாருமேகிடைக்கமாட்டார்கள். எனவேஉங்களைச் சுற்றியிருக்கும்எல்லோரையும் அப்படியேஏற்றுக்கொள்ளுங்கள் உங்களுக்குபிடித்தவரை அளவுக்கதிகமாகவிரும்புங்கள்.. காரணம் அன்புசெய்தல் அவ்வளவு சுகம் !

17.முயற்சியை கைவிடாதீர்கள்!

உங்களால் முடிக்க முடியாதசவால்கள், ஜெயிக்க முடியாதசந்தர்ப்பங்கள் வரும் போதெல்லாம், உங்கள் நம்பிக்கையின் மீது, உங்களுக்கே சந்தேகம் வரும். அப்போதெல்லாம், உங்கள்முயற்சியை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள். தோல்வி என்பதுதற்காலிகமானதே.. வீழ்வது என்பதுதவறல்ல..வீழ்ந்தே கிடப்பதுதான்தவறு..எனவே இன்னொரு முறைமுயற்சி செய்துபாருங்கள்.

18.உங்களதுசிறப்பைக்கொடுங்கள்!

ஏதேனும் ஒரு முயற்சியில்உங்களால், ஜெயிக்க முடியாமலேபோகலாம். அப்போதெல்லாம்என்னால் முடியாது எனஒதுங்கிப்போகாமல், எவ்வளவுதான் நம்மால் முடியும் எனசுயபரிசோதனை செய்துதான்பாருங்களேன். உங்கள் முயற்சிக்குதகுந்த பலன் நிச்சயம் உங்களுக்குகிடைக்கும்.

19.நமக்கு நாமே நல்லது!

உலகில் உங்களது மிகச்சிறந்தகாதலன் / காதலி நீங்களாகவேஇருக்க வேண்டும். உங்கள் உடலின்மீது உங்களுக்கு மிகுந்த அக்கறைநிச்சயம் தேவை. சுவர்இருந்தால்தானே சித்திரம்? எனவே, உணவு, உறக்கம் என உங்கள்விஷயங்களில் அதிக கவனம்இருக்கட்டும். நீங்கள் முதலில்உங்களை விரும்புங்கள்.

20. நன்மையே செய்வோம்!

எப்போதும் நல்ல விஷயங்களையேசெய்வோம். அதுவே எப்போதும்இன்பம் தரும். நல்ல விஷயங்களைசெய்யும் போது, நம்மை பாராட்டவேறு யாரும் வேண்டாம். நமதுமூளையே, நம்மை பாராட்டி , மகிழ்ச்சியாக்கி விடும்.

தவறுசெய்யும் போது, இதனால்தான் குற்றவுணர்ச்சிநம்மை துயரம் செய்கிறது. எனவேநல்லதே செய்வோம்.

 மகிழ்ச்சியாக இருப்போம் !

ஹார்வர்டு பல்கலைக்கழகம்மகிழ்ச்சியாக இருக்க, சொல்லிக்கொடுக்கும் வழிகள்தான்இவை.

இதைஇந்த ஆண்டிற்கு மட்டுமல்ல. எல்லா ஆண்டும் பின்பற்றுவதன்மூலம், மகிழ்ச்சிஅதிகரிக்கும்தானே?






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive