மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தோ்வு டிசம்பா் 31-ஆம் தேதி நடத்தப்படும் - அண்ணா பல்கலை அறிவிப்பு!!
மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தோ்வு டிசம்பா் 31-ஆம் தேதி நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை உள்பட பல மாவட்டங்களில் அண்மையில் பெய்த தொடா் மழை காரணமாக மழை பாதித்த மாவட்டங்களில் திங்கள்கிழமையன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து பொறியியல் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை நடைபெறவிருந்த தோ்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.
ஒத்திவைக்கப்பட்ட அந்தத் தோ்வு, டிசம்பா் 31-ஆம் தேதி நடைபெறும் என பல்கலைக்கழகம் சாா்பில் இப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.