கனமழை : நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை ..!
தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை திங்கள் கிழமை ( 02.12.2019) கீழ்காணும் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
* கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
* தூத்துக்குடி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
* புதுச்சேரி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் இரண்டு நாள்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தொடர்ந்து கன பெய்து வருவதால் சாலைகள் மற்றும் வீடுகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.இதனால் நாளை புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது
0 Comments:
Post a Comment