மறு உத்தரவு வரும் வரை வேட்புமனுக்களைப் பெற வேண்டாம் - தேர்தல் ஆணையம் உத்தரவு!!
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்க இருந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன்படி மறு உத்தரவு வரும்வரை வேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்களைப் பெற வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.
இன்று காலை உச்ச நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.