சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடம் அறிவிப்பு
தருமபுரி மாவட்ட நகராட்சி பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
டவுன் தொடக்கப்பள்ளி மற்றும் அம்பலத்தவாடி தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக உள்ளது.
சம்பளம் :
ரூ. 7,700 முதல் 24,200 வரை சம்பளமாக கொடுக்கப்படும்.
கல்வித் தகுதி :
பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவை சார்ந்தவர் : 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் வகுப்பு : 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் : குறைந்தபட்சம் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சம் 40 வயது வரை
விண்ணப்பிக்கலாம், பழங்குடியினர் : குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சம் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் : குறைந்தபட்சம் 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சம் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய குறிப்பு : விண்ணப்பதாரர் குடியிருக்கும் இடத்திற்கும் காலியாக உள்ள சத்துணவு மையத்திற்கும் இடையே உள்ள தூரம் 3 கீ.மீ க்குள்ளதாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2019/11/2019113069.pdf தறவிறக்கம் செய்து. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2019/11/2019113069.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.12.2019 மாலை 5.00 மணி வரை