பி.எட்., கல்லுாரிகளுக்கு வாட்ஸ் ஆப் குழு
சென்னை: பி.எட்., கல்லுாரிகளுக்கு என, தனி, வாட்ஸ் ஆப் குரூப் துவங்க, ஆசிரியர் கல்வியியல் பல்கலை முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 700 பி.எட்., மற்றும் எம்.எட்., கல்லுாரிகள் இயங்குகின்றன. இந்த கல்லுாரிகளின் பாடத்திட்டம், தேர்வு, வகுப்பு அட்டவணை உள்ளிட்ட அனைத்து பணிகளையும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை மேற்கொள்கிறது.
இந்நிலையில், இக்கல்லுாரிகளுக்கு, பல்கலையால் அனுப்பப்படும் சுற்றறிக்கைகள், தகவல்கள், உரிய நிர்வாகிகளிடம் சரியாக சேர்வதில்லை என்று, புகார்கள் வந்தன.இதையடுத்து, பி.எட்., கல்லுாரிகளின் நிர்வாகிகளுக்கு என, &'வாட்ஸ் ஆப்&' குழு அமைத்து, தகவல்களை அனுப்ப, ஆசிரியர் கல்வியியல் பல்கலை முடிவு செய்துள்ளது. இதற்காக, அனைத்து பி.எட்., கல்லுாரிகளும், தங்கள் நிர்வாகிகளின், வாட்ஸ் ஆப் மொபைல் போன் எண்களை, பல்கலையில் பதிவு செய்யுமாறு, பல்கலை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment