திருக்கார்த்திகை நாளில் ஆங்கிலப் பயிற்சி வகுப்பு : அதிருப்தியில் ஆசிரியர்கள்

திருக்கார்த்திகை நாளில் ஆங்கிலப் பயிற்சி வகுப்பு : அதிருப்தியில் ஆசிரியர்கள்



அண்மையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) வகுப்புகள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேனிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில பாடப் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு எதிர்வரும் 10, 11 ஆகிய நாள்களில் புலிவலம் மற்றும் மன்னார்குடி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இரண்டு கட்டங்களாக வழங்கப்பட உள்ளன. டிசம்பர் 10 அன்று திருக்கார்த்திகை தீபத் திருநாள் ஆகும். மேலும், அன்று வரையறுக்கப்பட்ட விடுமுறையும் கூட. இத்தகைய சூழலில் பயிற்சி வகுப்பில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளனர். மேலும், பயிற்சி நடைபெறும் இவ்விரு மையங்களும் எளிதில் வந்து செல்லும் இடமல்ல. பேருந்துகள் நிற்காதவை.


சற்றேறக்குறைய 50 கி.மீ.குறையாமல் பயிற்சியின் பொருட்டு பயணம் மேற்கொண்டு பல்வேறு சிரமங்களுக்கிடையில் பயிற்சிக்கு வரும் பெண் ஆசிரியைகள் பயிற்சி முடித்து மீண்டும் வீடுசேர இரவாகி விடும் சூழல் கவனத்தில் கொள்ளத்தக்கது. ஆகவே, எதிர்வரும் டிசம்பர் 10 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பயிற்சி வகுப்பை வேறொரு நாளில் நடத்திட வேண்டுமென்பது அனைத்து ஆசிரிய ஆசிரியைகளின் வேண்டுகோள் ஆகும். சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive