அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை
அங்கன்வாடி குழந்தைகளுக்கு ரூ.16 கோடி மதிப்பில் வண்ண சீருடை வழங்க ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 54,439 அங்கன்வாடி மையங்கள் உள் ளன. இங்கு 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சத் துணவு, சுகாதாரம், முன்பரு வக் கல்வி ஆகியவை வழங் கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டு களாக, அங்கன்வாடி மையங் களுக்கு குழந்தைகள் ஒழுங் காக வருவது இல்லை.
எனவே, அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளின் எண் ணிக்கையை அதிகரிக்கும் விதமாக, ஒரு குழந்தைக்கு ரூ.262.50 மதிப்பில் 2 செட் வண்ண சீருடைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு குழந்தைகளுக்கு வண்ண சீருடை வழங்க ரூ.16.04 கோடி மதிப்பில் 6 லட்சத்து 11 ஆயிரத்து 907 வண்ண சீருடைகள் கொள் முதல் செய்யப்பட உள்ளன. இதற்கு டெண்டர் கோரப் பட்டுள்ளது. இதற்கான அவகாசம் முடியும் நாளான வரும் 31-ம் தேதி மாலை டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது.