'போகி'க்கு நாளை ( ஜன.14 ) விடுமுறை உண்டா? இன்று அரசு அறிவிப்பு?
பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில், நாளை(ஜன.,14) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, தமிழகம் முழுவதும், நாளை மறுநாளில் இருந்து, மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. வெளியூர்களில் உள்ளவர்கள், பண்டிகையை கொண்டாடும் வகையில், தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
பொங்கலுக்கு முன், நாளை போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த நாளில், பழைய தேவையற்ற பொருட்களை, வீடுகளில் இருந்து அகற்றுவது வழக்கம். அதன்பின், பொங்கலை கொண்டாட பொதுமக்கள் தயாராவர். இதற்கு வசதியாகவும், சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் வகையிலும், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என, பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
அரசின் வரையறுக்கப்பட்ட விடுமுறை பிரிவில், போகி நாளில் விடுமுறை விட வாய்ப்புள்ளதாக, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து, இன்று அரசு அறிவிப்பு வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
'மாணவர்கள், பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல, வரும், 14ம் தேதியும் விடுமுறை வழங்க, பள்ளி கல்வித்துறைக்கு, தமிழகஅரசு உத்தரவிட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாசும் வலியுறுத்தியுள்ளார்.