அனைத்து பள்ளிகலும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு 30.01.2020 இன்று காலை 11.00 மணியளவில் இரண்டு நிமிடம் மௌனம் செலுத்துதல் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுக்க வேண்டும்! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, January 29, 2020

அனைத்து பள்ளிகலும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு 30.01.2020 இன்று காலை 11.00 மணியளவில் இரண்டு நிமிடம் மௌனம் செலுத்துதல் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுக்க வேண்டும்!

அனைத்து பள்ளிகலும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு 30.01.2020 இன்று காலை 11.00 மணியளவில் இரண்டு நிமிடம் மௌனம் செலுத்துதல் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுக்க வேண்டும்!

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு 30.01.2020 இன்று காலை 11.00 மணியளவில் இரண்டு நிமிடம் மௌனம் செலுத்துதல் மற்றும் உறுதி மொழி எடுக்கவும் அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது - CEO, வேலூர்.


உறுதிமொழி 

இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத , உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன் / குடிமகள் ஆகிய நான் , நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன் . தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு , எவர்மீதும் தெரிந்தோ , தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம் , வாக்கு , செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன் . அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க , சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும் , உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன் . இந்திய அரசியலமைப்பின்பால் - எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன் .

Post Top Ad