Atm கார்ட் விதிகள் மாற்றம்.. ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு! 16 மார்ச் 2020 தான் கடைசி தேதி! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, January 17, 2020

Atm கார்ட் விதிகள் மாற்றம்.. ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு! 16 மார்ச் 2020 தான் கடைசி தேதி!

Atm கார்ட் விதிகள் மாற்றம்.. ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு! 16 மார்ச் 2020 தான் கடைசி தேதி!
10 வருடங்களுக்கு முன்பு வரை அதிகம் பழக்கப்படாத ஏடிஎம், ஆன்லைன் பேங்கிங், மொபைல் போன் பேங்கிங் எல்லாம் கடந்த சில வருடங்களாக சராசரி ஆகிவிட்டது.
இன்று தள்ளு வண்டியில் சில்லறை வியாபாரம் செய்பவர்கள் கூட கூகுள் பே, போன் பேவில் தங்களுக்கான பணத்தை பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்த அளவுக்கு டெக்னாலஜி, வங்கி சேவையின் முகத்தை மாற்றி இருக்கிறது.




திருட்டுத் தனம்

டெக்னாலஜி வழியாக வங்கி சேவைகள் வளர்ந்து இருக்கும் அதே நேரத்தில், ஆன்லைன் திருட்டுத் தனங்களும் கணிசமாக அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. இதை தடுக்க தற்போது ஆர்பிஐ ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்து ஏடிஎம் போன்ற எல்லா கார்ட்களிலும் சில புதிய வசதிகளைக் கொண்டு வந்து இருக்கிறது.
ஆர்பிஐ அறிவிப்பு

டெபிட் கார்ட் மற்றும் க்ரெடிட் கார்ட் போன்றவைகளின் பாதுகாப்பை அதிகரிக்க, இனி டெபிட் மற்றும் க்ரெடிட் கார்ட்களில் எந்த மாதிரியான சேவைகளை பயன்படுத்த வேண்டும், பயன்படுத்த வேண்டாம், எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்பதை எல்லாம், கார்ட் உரிமையாளர்களே தீர்மானிக்க வசதி செய்ய வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.




விளக்கம்

உதாரணமாக: அமீர் ஒரு டெபிட் கார்ட் வைத்து இருக்கிறார். அவர் டெபிட் கார்ட் மூலம், எவ்வளவு பணத்தை தன் கார்டில் இருந்து பயன்படுத்த முடியும்,
பணப் பரிமாற்றத்தை உள்நாட்டில் மட்டும் செய்யலாமா அல்லது வெளிநாட்டிலும் செய்யலாமா,
பி ஓ எஸ் இயந்திரங்கள் மற்றும் ஏ டி எம் இயந்திரங்களில் பயன்படுத்துவது (கார்ட் கொடுக்கும் போதே வசதி இருக்கும்), ஆன்லைன் பணப் பரிமாற்றங்களுக்கு தன் கார்டை பயன்படுத்தலாமா என்பதை எல்லாம் கார்ட் உரிமையாளரே தீர்மானிக்கலாம்.
வேண்டுகோள்

ஒரு டெபிட் அல்லது க்ரெடிட் கார்டைக் கொடுக்கும் போது, ஏ டி எம் இயந்திரங்கள் மற்றும் பி ஓ எஸ் போன்ற contact based points-களில் மட்டும் செயல்படும் விதத்தில் கொடுக்கச் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ. அப்படி என்றால் மற்ற ரக பணப் பரிமாற்றங்கள் என்ன ஆவது..?




மற்ற சேவைகள்

மேலே சொன்னது போல, முதலில் டெபிட் கார்ட் மற்றும் க்ரெடிட் கார்ட் கொடுக்கும் போது இந்தியாவில் இருக்கும் ஏ டி எம் மற்றும் பி ஓ எஸ் போன்ற contact based points -களில் மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகு நமக்குத் தேவை என்றால் contact-less பரிமாற்றங்கள் வழியாக பணப் பரிமாற்றங்களைச் செய்ய நாம் தான் மேனுவலாக enable செய்ய வேண்டி இருக்குமாம்.
இப்போது

தற்போது வரை வங்கிகளில் இருந்து நாம் வாங்கிக் கொள்ளும் க்ரெடிட் மற்றும் டெபிட் கார்ட்களில் contact based points மற்றும் contact-less பணப் பரிமாற்றங்கள் என எல்லாமே Enable ஆகி இருக்கும். எனவே கார்ட் நம் கைக்கு வந்த நொடியில் இருந்து எங்கு வேண்டுமானாலும் கார்ட் வழியாக பணத்தை செலவழிக்கலாம்.
புதிய வசதிகள்

1. ஏடிஎம், பிஓஎஸ், ஆன்லைன் டிராசாக்‌ஷன், காண்டாக்ட் லெஸ் டிரான்சாக்‌ஷன்... போன்ற முறைகளை Enable / Disable செய்ய அனுமதிக்க வேண்டும்.
2. தங்கள் கார்ட் வழியாக பணப் பரிவர்த்தனைகளுக்கான லிமிட்களை நிர்ணயிக்க அல்லது பணப் பரிவர்த்தனை லிமிட்களை மாற்ற ஆக்ஸிஸ் கொடுக்க வேண்டுமாம்.




கடைசி தேதி

இப்படி உள் நாடு மற்றும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகள் என இரண்டுக்குக்குமே ஆக்ஸிஸ் கொடுக்க வேண்டுமாம்.
இதற்கு கடைசி தேதி 16 மார்ச் 2020. இது இனி கொடுக்க இருக்கும் புதிய கார்ட்கள் மட்டுமின்றி, Re-issue கார்ட்களுக்கும் இதே நடைமுறையைப் பின்பற்ற வேண்டுமாம்.
ஏற்கனவே கார்ட் வைத்திருப்பவர்கள்

தற்போது க்ரெடிட் மற்றும் டெபிட் கார்ட் வைத்திருப்பவர்கள், இதுவரை ஒரு முறை கூட சர்வதேச பணப் பரிவர்த்தனைகளோ அல்லது காண்டாக்ட் லெஸ் டிரான்சாக்‌ஷன்களையோ செய்யவில்லை என்றால், கட்டாயமாக அந்த வசதிகளை Disable செய்யச் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ. மேலே சொன்ன புதிய சேவைகள், ப்ரீபெய்ட் கிஃப்ட் கார்ட்களுக்கு பொருந்தாதாம்.

Post Top Ad