'நீட்' தேர்வுக்கான விண்ணப்பத்தில், இன்று முதல் திருத்தம் செய்ய வாய்ப்பு !
'நீட்' தேர்வுக்கான விண்ணப்பத்தில், இன்று முதல் திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 3ல், நாடு முழுவதும் நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு, டிசம்பர், 2 முதல், ஜனவரி, 6 வரை, மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இந்நிலையில், விண்ணப்பங்களில் உள்ள பிழைகளை சரி செய்ய, இன்று ஆன்லைன் வசதி துவங்க உள்ளது. இந்த வசதி, 31ம் தேதி வரை நீடிக்கும் என, நீட் தேர்வு குழு அறிவித்துள்ளது.