பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி சலுகை குறைவாகவே இருக்கும் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, January 29, 2020

பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி சலுகை குறைவாகவே இருக்கும்

பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி சலுகை குறைவாகவே இருக்கும்!!
இந்தியப் பொருளாதாரம்மோசமாக இருப்பதாலும்ஏற்கெனவேஅறிவிக்கப்பட்ட பல வரிச்சலுகையினாலும் மத்தியஅரசின் வரிவருவாய்வெகுவாகக்குறைந்துள்ளதாகக்கூறப்படுகிறது. இதனால்,வரும் பட்ஜெட்டில்பெரிதும்எதிர்பார்க்கப்பட்டதனிநபர் வருமான வரிகுறைப்பு பெரிய அளவில்இருக்காது எனதெரிகிறது.




இந்தியப் பொருளாதாரசூழல்மந்தமாகஇருப்பதால் மறைமுகவரிகளான சரக்கு மற்றும்சேவை வரி வருவாய்ரூ.50,000 ஆயிரம் கோடிஎனும் அளவுக்குக்குறைவாக இருக்கும்எனத் தெரிகிறது.இந்நிலையில் நேரடி வரிவருவாயும்குறைந்துள்ளதாகதகவல்கள்வெளியாகியுள்ளன.




கார்ப்பரேட் வரி 30சதவீதத்திலிருந்து 22சதவீதமாகவும் புதியநிறுவனங்களுக்கானவரி 25 சதவீதத்திலிருந்து15 சதவீதமாகவும்குறைக்கப்பட்டதைஅடுத்து நேரடி வரிகளானகார்ப்பரேட் வரி மற்றும்தனிநபர் வருமான வரிவருவாயும்குறைந்துள்ளது.குறைந்தபட்சமாகரூ.1.5லட்சம் கோடிஅளவுக்குகுறையும்எனவும் கணிக்கப்பட்டுஉள்ளது.
பொருளாதாரநடவடிக்கைகளையும்முதலீடுகளையும்ஊக்குவிக்கும் நோக்கில்குறைக்கப்பட்ட கார்ப்பரேட்வரியினால் எந்தப்பலனும்ஏற்படவில்லை.இந்நிலையில் அரசின்வரி வருவாயும்வெகுவாகப்பாதித்திருக்கிறது.




அரசு முன்னெடுத்துள்ளபங்கு விலக்கல்நடவடிக்கைகளும்எதிர்பார்த்த இலக்கைஅடையவில்லை.இதனால் அரசு பலவகைகளிலும் நிதிப்பற்றாக்குறைக்குஆளாகி மொத்தமாக அரசின் வரிவருவாய் ரூ.2.5 லட்சம்கோடி முதல் ரூ.3 லட்சம்கோடி வரையில்குறையலாம் எனக்கூறப்படுகிறது. இதனால்பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல்செய்யப்பட உள்ளபட்ஜெட்டில் பெரிதும்எதிர்பார்க்கப்பட்டதனிநபர் வருமான வரிகுறைப்பு பெரிய அளவில்எதிர்பார்க்க முடியாதுஎன்று நிபுணர்கள்தெரிவிக்கிறார்கள்.

Post Top Ad