பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும் அவர்களுக்கு பயிற்சி வழங்கும் ஆசிரியர்களுக்கும் வினாத்தாள் குறித்த தெளிவுரை - தேர்வுத்துறை வெளியீடு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, January 28, 2020

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும் அவர்களுக்கு பயிற்சி வழங்கும் ஆசிரியர்களுக்கும் வினாத்தாள் குறித்த தெளிவுரை - தேர்வுத்துறை வெளியீடு.

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும் அவர்களுக்கு பயிற்சி வழங்கும் ஆசிரியர்களுக்கும் வினாத்தாள் குறித்த தெளிவுரை - தேர்வுத்துறை வெளியீடு.

* மேல்நிலை முதலாம் | இரண்டாம் ஆண்டிற்கு வினாத்தாள் கட்டமைப்பு ( Blue Print ) இல்லாத நிலையில் , புத்தகத்தின் உட்பகுதியில் இருந்தும் , பாடம் சார்ந்தும் வினாக்கள் பொதுத்தேர்வில் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது .

* 2019 - 20 கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பிற்கும் புதியப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து , இவ்வகுப்பு மாணவர்களுக்கும் வினாத்தாள் கட்டமைப்பு இல்லாத நிலை உள்ளதால் , சென்ற ஆண்டு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே மாணவர்கள் புத்தகம் முழுமையும் படித்து புரிந்து கொண்டு வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் மேலும் , வினாத்தாள் கட்டமைப்பு ( Blue Print ) இல்லை என்பதால் வினாக்கள் எந்த பாடத்திலிருந்தும் எந்த வகையிலும் ( வினாத்தாள் வடிவமைப்பில் ( Pattern ) மாற்றமின்றி கேட்கப்படலாம் .

* மாதிரி வினாத்தாள் சான்பது வினாத்தாள் வடிவமைப்பான பகுதி  பிரிவுகள் மதிப்பெண்கள் ஒதுக்கீடு பற்றி மாணவர்கள்  ஆசிரியர்கள் அறிந்து கொள்வதற்காகவே அன்றி மாதிரி வினாத்தாட்களில் கேட்கப்பட்டுள்ள வினா வகைகளே ( எடுத்துக்காட்டாக பொருத்துக கோடிட்ட இடங்களை நிரப்புக , தலைப்பு வினாக்கள் , வரைபட வினாக்கள் , வடிவியல் வினாக்கள் மற்றும் பல ) கேட்கப்பட வேண்டும் என கட்டாயமில்லை .

* ஒவ்வொரு பகுதியிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மதிப்பெண்களில் மாற்றம் இருக்காது எனவும் , ஆனால் ஒவ்வொரு பகுதியிலும் கேட்கப்படும் வினாக்கள் எந்தவொரு வடிவிலும் இருக்கும் என்பதனை அனைத்து மாணவர்கள் | ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும் .

* வினாத்தாள் கட்டமைப்பு தேவையில்லை என்பது அரசின் கொள் . முடிவாகும் . காவே , மாதிரி வினாத்தாளில் உள்ளவாறு வினாக்கள் கேட்கப்படவில்லை என பானவர்கள் | ஆசிரியர்கள் உரிமை கோர இயலாது . மாதிரி வினாத்தாள் , வினாத்தான் வடிவமைப்பிற்காக , ( Pattern ) மட்டுமே வெளியிடப்படுகிறது .

* கடந்த ஆண்டிற்கு முந்தைய ஆண்டு வரை Blue Print இருந்ததால் , கட்டமைப்பு மாற்றமின்றி வினாக்கள் கேட்கப்பட்டன . ஆனால் புதிய பாடத்திட்டத்தில் கட்டமைப்பு இல்லாததால் , எந்த வகையான வினாக்களும் கேட்கப்படலாம் . ஆனால் வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் இருக்காது என்ற விவரத்தினை மாணவர்கள் / ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.


Post Top Ad