தலைமுடியை அடர்த்தியாக்கும் வேப்ப எண்ணெய்
வேப்ப எண்ணெய் உங்கள் தலைமுடியை பாதுகாக்க பல வழிகளில் உதவுகிறது. அதாவது, இந்த எண்ணெய் முதலில் உச்சந்தலையை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது. அத்துடன் வேப்ப எண்ணெய் உச்சந்தலையில் இருக்கும் நுண்ணுயிரிகளிடமிருந்து எந்தவித இடையூறும் இல்லாமல் முடியின் வேர்பகுதியை நன்கு வளரச் செய்கிறது.
மேலும், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடியை சேதமடையாமல் பாதுகாக்கின்றன. வேப்ப எண்ணெய் கொண்டு உச்சந்தலையில் அடிக்கடி மசாஜ் செய்வதால் முடி அடர்த்தியாகவும், வலுவாகவும் மாறும்.