கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா? அழைக்கிறது காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி

நிறுவனம்: மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்.
மொத்த காலியிடங்கள்: 80
பணியிடம்: காஞ்சிபுரம்
பணி: அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்
வங்கிகள் வாரியான காலியிடங்கள் விவரம்:
வங்கி: காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி
பணி: அலுவலக உதவியாளர் - 39
சம்பளம்: மாதம் ரூ.10,500 - 31,650/-
பணி: ஓட்டுநர் - 05
சம்பளம்: மாதம் ரூ.11,250 - 33,075
வங்கி: நகர கூட்டுறவு வங்கி
பணி: அலுவலக உதவியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.9,200 - 25,250
வங்கி: நகர கூட்டுறவு கடன் சங்கம்
பணி: அலுவலக உதவியாளர் - 07
சம்பளம்: மாதம் ரூ.11,000 - 34,700
வங்கி: தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி
பணி: அலுவலக உதவியாளர் - 11
சம்பளம்: மாதம் ரூ.12,300 - 35,150
பணி: அலுவலக உதவியாளர்- 17
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 27,610
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதும், இலகுரக ஓட்டுநர் பணியில் 2 ஆண்டு அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் காஞ்சிபுரம் மற்றும் செங்கற்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் மேல் கூறப்பட்டுள்ள பணிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவுச் சங்கங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், எண்.5A, வந்தவாசி சாலை, ஒருங்கிணைத்த கூட்டுறவு அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் 631 501.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டம் செலுத்த தேவையில்லை. மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://kpmdrb.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளTN Cooperative Bank Recruitment 2020 அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். விண்ணப்பப்படிவங்களை பெறுவதற்கு அறிவிப்பு லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.02.2020