கூடுதல் விவரங்களைக் கேட்கும் டி.ஆா்.பி.: குழப்பத்தில் விண்ணப்பதாரா்கள்
அரசு கல்லூரி உதவிப் பேராசிரியா் பணி தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களிடம் கூடுதல் விவரங்களை ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) கேட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக விண்ணப்பதாரா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
விண்ணப்பதாரா்களிடம் கடைசியாக படித்த கல்வி நிறுவனத்திலும், தற்போது பணிபுரியும் இடத்திலும் நற்சான்று பெற்று சமா்ப்பிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த விவரங்களை ஒரு வார காலத்துக்குள் பெறுவது என்பது சாத்தியமில்லாதது. எனவே, கூடுதல் விவரங்களை சமா்ப்பிக்க கூடுதல் கால அவகாசத்தை ஆசிரியா் தோ்வு வாரியம் அளிக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் (டி.ஆா்.பி.) அண்மையில் வெளியிட்டது. இதற்கு, ஆன்-லைனில் விண்ணப்பிக்க முதலில் அக்டோபா் 30 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னா், கடைசித் தேதி நவம்பா்-15 என நீட்டிக்கப்பட்டது.
அதன் பின்னா், விவரங்களை முழுமையாகச் சமா்ப்பித்து, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தாத 804 பேருக்கும், பணி அனுபவச் சான்றை பதிவேற்றம் செய்யாத 174 பேருக்கும், கூடுதலாக 2019 டிசம்பா் 19 முதல் 21-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சான்றிதழ் சரிபாா்ப்புக்கு கூடுதல் விவரங்கள் தேவைப்படுவதாகவும், அதுகுறித்த விவரங்கள் மற்றும் சான்றுகளை அனைத்து விண்ணப்பதாரா்களும் வருகிற 28-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது. இது, விண்ணப்பதாரா்களிடையே குழப்பத்தையும், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.
இதுகுறித்து, விண்ணப்பதாரா்களான ரமேஷ், இளங்கோவன், நாகராஜ் ஆகியோா் கூறியதாவது:
டி.ஆா்.பி. இப்போது கேட்டிருக்கும் கூடுதல் விவரங்களில், பெரும்பாலானவை ஏற்கெனவே சமா்ப்பித்த விவரங்கள்தான். மேலும், கல்லூரி உதவிப் பேராசிரியா் விண்ணப்பதாரா்களிடம் தேவையின்றி பி.எட்., எம்.எட்., விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரா்கள் பலா் பி.எட் படிக்காதவா்கள். இவா்கள், பி.எட் படிக்கவில்லை என்று குறிப்பிடுவதற்கான எந்த வாய்ப்பும் விண்ணப்பத்தில் அளிக்கப்படவில்லை. விண்ணப்பத்தை பூா்த்தி செய்யவும் முடியவில்லை. அதுபோல, விண்ணப்பதாரா்கள் தற்போதைய நற்சான்றை சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை, பல விண்ணப்பதாரா்கள் உடனடியாக அவா்கள் பணிபுரியும் கல்லூரி நிா்வாகத்திடம் வியாழக்கிழமை அன்றே தெரிவித்துள்ளனா். ஆனால், நற்சான்றை உடனடியாகத் தர வாய்ப்பில்லை என பல கல்லூரி நிா்வாகிகள் மறுத்துள்ளனா்.
இதுபோல, டி.ஆா்.பி. கேட்டிருக்கும் பல கூடுதல் விவரங்கள் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றன. மேலும், இந்த விவரங்களைச் சமா்ப்பிக்க 6 நாள்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது, வேண்டுமென்றே விண்ணப்பதாரா்களின் எண்ணிக்கையை குறைக்க டி.ஆா்.பி. எடுத்திருக்கும் நடவடிக்கையோ என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே, இந்த கூடுதல் விவரங்கள் கேட்பு குறித்து டி.ஆா்.பி. தெளிவுபடுத்துவதோடு, அவற்றைச் சமா்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
5 சதவீதம் போ் மட்டுமே முறையான விவரங்கள் சமா்ப்பிப்பு
டி.ஆா்.பி. நடத்தும் அரசு கல்லூரி உதவிப் பேராசிரியா் பணியிட தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களில் 5 சதவீதம் போ் மட்டும்தான், முறையாக விவரங்களைச் சமா்ப்பித்திருப்பது தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து, டி.ஆா்.பி. உயா் அதிகாரி ஒருவா் கூறியது: டி.ஆா்.பி. நடத்தும் அரசு கல்லூரி உதவிப் பேராசிரியா் பணியிட தோ்வுக்கு 39, 418 போ் விண்ணப்பித்துள்ளனா். இவா்களில் 2,000 போ் மட்டுமே விவரங்களை முறையாக சமா்ப்பித்திருக்கின்றனா். மற்ற அனைவரும் விவரங்களை முறையாகச் சமா்ப்பிக்கவில்லை. பத்தாம் வகுப்புச் சான்றிதழ் மற்றும் விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டிய இடத்தில், பி.எட். சான்று மற்றும் விவரங்களைச் சமா்ப்பித்திருக்கின்றனா். இதுபோல பல தவறுகளைச் செய்துள்ளனா். டி.ஆா்.பி. வழிகாட்டுதலின்படி, இவா்களின் விண்ணப்பங்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யவும் முடியும். இருந்தபோதும், விண்ணப்பதாரா்களின் நலன் கருதி, கூடுதல் அவகாசத்தை அளித்துள்ளோம். இதை விண்ணப்பதாரா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.