வலைதளங்கள் ஆசிரியர்களுக்கு நற்பெயரை பெற்றுத்தருமா?
சமீப காலமாக கல்வி சம்பந்தமான வலைதளங்களில் ஆசிரியர்கள் விடுமுறை எப்போது வரும், நீண்டகால விடுமுறைகள் எப்போது கிடைக்கும், பொங்கலுக்கு ஒன்பது நாள் விடுமுறை கீடைக்கும் இந்த ஆண்டு இனி எப்போது விடுமுறை கிடைக்கும்? என்பது போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடுகின்றன.
பொங்கலுக்கு விடுமுறை கேட்டதாக கூறி ஏசியாநெட் செய்தி நிறிவனம் சமீபத்தில் ஆசிரியர்களை ஏளனம் செய்தது நினைவிருக்கலாம். ஏப்ரல் மாதம் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்க இருப்பதை இப்போதிரந்தே கடினமான கேள்விகள் நிறைந்த வேலை என பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கும் செய்தீகளை வெளியிடுகின்றனர்.
ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் செய்திகளை வெளியிட்டால் ஆசிரிய சமூகத்துக்கு நன்மை பயக்கும். இல்லையென்றால் ஆசிரியர்களை விடுமுறைக்கு அலைகிறது போன்ற பெயரையே மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்.