பள்ளிகளில் கொண்டாடிய இளைஞர் எழுச்சி நாள் தொடர்பாக அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
பள்ளிக் கல்வி - முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா . டாக்டர் . ஏ . பி . ஜே . அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் விழா - 2019 அக்டோபர் , 15 அன்று இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையினை அனுப்பி வைக்க கோருதல் - சார்பு .
பார்வை 1 மற்றும் 2 - ல் காணும் கடிதத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா . டாக்டர் . ஏ . பி . ஜே . அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் , 15 - யினை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடுமாறும் , இது தொடர்பாக பார்வை 1 - ல் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை செயல்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டதையடுத்து பார்வை 3 - ல் காணும் கடிதம் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது .
தற்போது பார்வை 1 - ல் கண்ட கடிதத்தில் நடைமுறைப்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை பள்ளிகளில் செயல்படுத்திய விவரங்கள் உள்ளடக்கிய அறிக்கை , புகைப்படம் மற்றும் இணைப்பில் கண்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து விரைந்து இவ்வியக்கக மின்னஞ்சல் முகவரிக்கு ( jdnsed @ nic . in ) அனுப்பி வைத்திடுமாறும் அதன் அசல் நகலினை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .