Ctet - மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு!
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு, ஜூலை, 5ல் நடத்தப்படும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.இதுகுறித்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வெளியிட்ட செய்திக் குறிப்பு:பள்ளி ஆசிரியர் தகுதிக்கான மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு, ஜூலை, 5ல் நடக்க உள்ளது. நாடு முழுவதும், 112 நகரங்களில், 20 மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.தேர்வு விபரங்கள் அடங்கிய முழுமையான அறிவிக்கை, வரும், 24ம் தேதி வெளியிடப்படும்.
ஆன்லைன் விண்ணப்ப பதிவும், அன்றே துவங்கி, பிப்ரவரி, 24ல் முடியும். தேர்வு கட்டணத்தை, பிப்., 27க்குள் செலுத்த வேண்டும்.இந்த தேர்வில், ஒரு தாள் எழுத வேண்டும் என்றால், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகள், 500 ரூபாயும், இரண்டு தாள் எழுத வேண்டும் என்றால், 600 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர், ஒரு தாளுக்கு, 1,000 ரூபாயும், இரண்டு தாளுக்கும் சேர்த்து, 1,200 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.