DEE - ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ள Staff profile - ல் 31.01.2020 - க்குள் Update செய்ய இயக்குநர் உத்தரவு.
தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதத்தில் , 31 . 08 . 2019 நிலவரப்படி ஆசிரியர் / மாணவர் பணியாளர் நிர்ணயம் செய்வது சார்பான நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலாளர் அவர்களால் ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தியதின் அடிப்படையில் EMIS இணையதளத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில் 2019 - 2020ஆம் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணயம் நடைபெற இருப்பதால் , அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ள Staff profile - ல் 31.01.2020 - க்குள் Update செய்யும் பணி முடித்தல் வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது .
மேலும் , இனிவரும் காலங்களில் நிர்வாக மாறுதல் ஏதேனும் வழங்க நேரிடின் , EMIS இணையதளம் வாயிலாக மட்டுமே செய்யப்பட வேண்டும் எனவும் அதைத் தவிர்த்து பிற வழிகளில் ( Manual order ) ஆணை எதுவும் வழங்கக் கூடாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட அளவில் குழு அமைத்து இந்தப் பணியினை விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. - தொடக்கக் கல்வி இயக்குநர்