Income Tax 2019 - 2020 | செலுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
🛡 அரசின் நேரடி வரி வருவாயில் உறுதியான பெரும் பங்கை அளிப்பவர்கள் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களுமே!
🛡 பொதுப் புத்தியில் அரசின் நிதிச் சுமைக்குக் காரணமானவர்களெனத் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தான் நாட்டின் வரி வருவாயில் உறுதியான நேரடி வரியாக வருமான வரி, கல்வி வரி & தொழில் வரியினை ஆண்டுதோறும் மார்ச் 31-ம் தேதிக்குள்ளாக 100% செலுத்தி வருகின்றனர்.
🛡 சராசரியாக மாதம் ரூ.42,000/-ற்கு மேல் நிகர ஊதியம் பெறுவோர், 2019-20-ம் நிதியாண்டில் பெற்ற ஊதியத்திலிருந்து 2020-21-ம் ஆண்டிற்கான வருமான வரியாக தங்களது ஒரு மாத ஊதியத்தினைச் செலுத்தியாக வேண்டும்.
🛡 இவ்வாறாக, ஆண்டின் 12 மாதங்களுக்கு 11 மாத ஊதியத்தினை மட்டுமே பெறும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நேரடி வரி வருவாயோடே கூடுதலாக, சக குடிமகன்கள் போன்றே தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து நுகர்வுப் பொருள்கள் மீதான மறைமுக வரியினையும் செலுத்தி வருகின்றனர்.
🛡 தங்களது பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும் வரி செலுத்தி வரும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் வருமானவரி கழிவிற்காக மேற்கொள்ளும் முதலீடுகளும் 99% அரசின் வருவாய் சார்ந்ததாகவே இருக்கின்றன.
அவ்வகையில், தனி நபர் வருமான வரிப் படிவம் தயாரிப்பில் கவனத்தில் கொள்ள வேண்டியவை :
🛡 ரூ.50,000/- நிலையான கழிவு அனைவருக்கும் உண்டு.
🛡 வீட்டுக்கடன் வட்டி ரூ.2,00,000/- வரை கழிக்கலாம்.
🛡 80C-ல் நல நிதியைப் பொறுத்தவரை GPF, PPF, SPF, FBF உள்ளிட்ட நல நிதிகளே அடங்கும்.
🛡 CPS பிடித்தத்தினை 80CCD-ல் தான் கழிக்க வேண்டும்.
🛡 GPF சந்தாதாரர்களுக்கு 80C-ல் வரும் ரூ.1,50,000/- மட்டுமே கழிக்க இயலும்.
🛡 CPS சந்தாதாரர்களைப் பொறுத்தவரை, 80C & 80CCD-ல் ரூ.1,50,000/-மும் 80CCD(1B)-ல் கூடுதலாக ரூ.50,000/-மும் கழித்துக் கொள்ளலாம்.
🛡 80D-ல் NHIS பிடித்தத்தைக் கழிப்பதோடு, குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவக் காப்பீடுகளையும் கழித்துக் கொள்ளலாம். மேலும், காப்பீடு செய்துகொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்ட பெற்றோரின் மருத்துவச் செலவுகளையும் கழிக்கலாம். 80D-ல் மொத்தமாக ரூ.1,00,000/- வரை கழிக்கலாம்.
🛡 80DD-ல் மாற்றுத்திறனாளியைக் குடும்ப உறுப்பினராகக் கொண்டோர் அவர்களுக்கான காப்பீடு & மருத்துவச் செலவாக, இயலாமை % 40-79 எனில் ரூ.75,000/-ம் 80%-ற்கு மேல் எனில் ரூ.1,25,000/- வரையும் கழிக்கலாம்.
🛡 80U-ல் மாற்றுத்திறனாளிக்கான சிறப்புக் கழிவாக, இயலாமை % 40-79 எனில் ரூ.75,000/-மும் 80%-ற்கு மேல் எனில் ரூ.1,25,000/- வரையும் கழிக்கலாம். இப்பிரிவில் குடும்ப உறுப்பினர்களுக்கு கழிக்கக் கூடாது.
🛡 80DDB-ல் நரம்பியல், முடக்குவாதம், புற்றுநோய், எய்ட்ஸ், சிறுநீரகச் செயலிழப்பு, இரத்த ஒழுக்கு, இரத்த சோகை உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சைச் செலவுகளை ரூ.40,000/- அல்லது ரூ.1,00,000/- வரை கழிக்கலாம்.
🛡 80E-ல் குடும்பத்தாரின் 8-வருடங்களுக்குட்பட்ட உயர்கல்விக் கடனுக்கான வட்டியை முழுமையாகக் கழிக்கலாம்
🛡 80EEB-ல் மின்சாரத்தில் இயங்கும் போக்குவரத்துச் சாதனங்களை (ஏப்ரல் 2019 - மார்ச் 2023) கடனில் வாங்கியதற்கான வட்டியைக் கழிக்கலாம்.
🛡 80G-ல் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கான நன்கொடையில் 50%-மும் அரசு நிவாரண உதவிகளுக்கான நன்கொடையில் 100%-மும் கழிக்கலாம்.
🛡 80GGA-ல் அறிவியல் ஆராய்ச்சி / கிராமப்புற வளர்ச்சிக்கான நன்கொடையில் 100% கழிக்கலாம்.
🛡 80GGC-ல் அரசியல் கட்சிகளுக்கான நன்கொடையில் 100% கழிக்கலாம். (ஊதியத்தில் 10% வரை நன்கொடையாக வழங்கலாம்)
🛡 மேற்கண்ட அனைத்துக் கழிவுகளும் போக வரிக்கான நிகர வருமானம் ரூ.5,00,000/- வரை வருவோருக்கு, வருமான வரியில் சிறப்புக் கழிவாக ரூ.12,500/- அனுமதித்துள்ளதால் வரிக்கான நிகர வருமானம் ரூ.5,00,000/- வரை உள்ளோருக்கு வருமான வரி வராது.
🛡 வரிக்கான நிகர வருமானம் ரூ.5,00,000/-க்கும் மேல் வருவோருக்கு,*
*2,50,001 - 5,00,000. = 5%
*5,00,001 - 10,00,000 = 20%
*10,00,001-ற்கு மேல் = 30%
*வருமான வரி செலுத்த வேண்டும்.